Home
Mobile

3 சேமிப்பு மாடல்களில் மேலுமொரு மலிவான ரெட்மீ ஸ்மார்ட்போன்; சியோமி அதிரடி.!

அது ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று பரவலாக

By Muthuraj

2017 ஆம் ஆண்டில் ஒரு வெற்றிகரமான பாதையை முன்னெடுத்த பின்னர், பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி அதே வேகத்தை இந்த ஆண்டும் எடுத்துள்ளது. ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ போன்ற அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை களம் இறக்கிய கையேடு, சியோமி நிறுவனம், அதன் மற்றொரு மலிவு விலை சியோமி ரெட்மீ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அது ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

3 சேமிப்பு மாடல்களில் மேலுமொரு மலிவான ரெட்மீ; சியோமி அதிரடி.!

இதுவரை ரெட்மீ எஸ்2 பற்றி ஏராளமான வதந்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் எதுவும் உறுதியற்றதாக இல்லை. இருப்பினும், ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் வருகையை கிட்டத்தட்ட உறுதி செய்யும் ஒரு தகவல், 91மொபைல்ஸ் வழியாக வெளியானது. கூறப்படும் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மீ எஸ்2 ஆனது 3சி (சீன கட்டாய சான்றிதழ்) தளத்தில் காணப்பட்டதை 91மொபைல்ஸ் வெளிப்படுத்தியது.

3சி சான்றிதழ்.!

3சி சான்றிதழ்.!

இருப்பினும் ரெட்மீ எஸ்2-வின் வெளியீட்டு தேதி பற்றிய கேள்வி இன்னும் ஒரு மர்மம் தான். வெளியான ஊடக அறிக்கைகளின் படி, அதன் வெளியீடு நிகழ் இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம். 3சி சான்றிதழ் தளத்தில் சிக்கிய ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் அதன் அம்சங்களை பற்றிய தகவலைக் கொடுக்கவில்லை. இருந்தாலும் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது.

திரை விகிதம்.!

திரை விகிதம்.!

ரெட்மீ எஸ்2 ஆனது சமீபத்தில் TENNA தளத்தில் காணப்பட்டது. இது இன்னொரு சீன சான்றிதழ் வலைத்தளம் ஆகும். இதில் ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் சில பிராதன அம்சங்களை காண முடிந்தது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் ஒரு இரட்டை பின்புற கேமரா அமைப்பு, பெஸல்-லெஸ் டிஸ்பிளே அதாவது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட டிஸ்பிளே கொண்டிருக்கும்.

12 எம்பி மற்றும் 8 எம்பி சென்சார்கள் என்கிற டூயல் கேமரா.!

12 எம்பி மற்றும் 8 எம்பி சென்சார்கள் என்கிற டூயல் கேமரா.!

இன்னும் சில அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு மொழியை பொறுத்தவரை, சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் ஒற்றுப்போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்னும் விரிவாக வெளியான லீக்ஸ் அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மீ எஸ்2 ஆனது 5.99 அங்குல எச்டி+ டிஸ்ப்ளே, 12 எம்பி மற்றும் 8 எம்பி சென்சார்கள் என்கிற டூயல் கேமரா மற்றும் ஒரு 16 எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் செல்பீ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்.!

2 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்.!

2ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் கொண்டு இயங்கும் சியோமி ரெட்மீ எஸ்2 ஆனது மொத்தம் 3 வேரியண்ட்கள் வரவிருக்கிறது. ஆம், 2 ஜிபி ரேம் + 16 ஜிபி ரோம், 4 ஜிபி ரேம் + 32 ஜிபி ரோம் மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ரோம் என்கிற மூன்று சேமிப்பு மாடல்களில் வெளியாகும். வண்ண மாறுபாடுகளை பொறுத்தவரை, கோல்ட், சாம்பல், பின்க், ரெட், ரோஸ் கோல்ட், சில்வர் மற்றும் வெள்ளை உட்பட பல மாடல்களில் வெளியாகும்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
பேட்டரி மற்றும் ஓஎஸ்.!

பேட்டரி மற்றும் ஓஎஸ்.!

ஒரு 3,080mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ கொண்டு இயங்கும். வளர்ந்துவரும் சந்தைகளை, முக்கியமாக சீனா மற்றும் இந்தியாவை, இலக்காக கொண்டு தான் இந்த சியோமி ரெட்மீ எஸ்2 வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இன்னும் பல அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல்கள் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Another affordable Xiaomi Redmi phone is coming: What we know so far. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X