எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் கிடைக்கும்.?

எப்போது எங்கள் கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் கிடைக்கும்.?

|

உலகமே விரும்பும் ஒரு பிஸ்கட்டின் பெயர் கொண்ட ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இறுதியாக அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த இயங்குதளம் சார்ந்து வெளியான அனைத்து வதந்திகளும் உண்மையாகிவிட்ட நிலைப்பாட்டில் எல்லோருடைய மனதிலும் எழும் ஒரு மிகப்பெரிய கேள்வி - எப்போது எங்கள் கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் கிடைக்கும்.? என்பதுதான்.

எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் கிடைக்கும்.?

லாலிபாப் மற்றும் மார்ஷ்மெல்லோ இன்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலையில், எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் கிடைக்கும் என்பதை பற்றிய விவரங்கள் இதோ.!

கூகுள் பிக்சல், நெக்சஸ்

கூகுள் பிக்சல், நெக்சஸ்

கூகுள் பிக்சல், பிக்சல் எக்ஸ்எல், நெக்சஸ் 5எக்ஸ், நெக்சஸ் 6பி, நெக்ஸஸ் பிளேயர் மற்றும் பிக்சல் சி டேப்ளெட் ஆகிய கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு ஓ பப்ளிக் பீட்டா திட்டத்தில் இணைவதின் மூலம் அல்லது ஆண்ட்ராய்டு வலைத்தளத்திலிருந்து இமேஜ் பைல்-தனை பதிவிறக்கம் செய்வதின் மூலமாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் பெறலாம்.

நோக்கியா

நோக்கியா

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. உடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா 8 ஆண்ட்ராய்டு 8.0 புதுப்பிப்பைப் பெறும் என்று எச்எம்டி க்ளோபல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒன்ப்ளஸ்

ஒன்ப்ளஸ்

ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் சமீபத்திய தலைமை ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் 5-ல் வருங்காலத்தில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஒன்ப்ளஸ் 3 மற்றும் 3டி கருவிகளுக்கும் இந்த அப்டேட் இறங்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

கூல்பேட் கூல் ப்ளே 6

கூல்பேட் கூல் ப்ளே 6

கூல்பேட் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான கூல் ப்ளே 6 சாதனத்தில் டிசம்பர் 2017 வாக்கில் ஆண்ட்ராய்டு ஓ அப்டேட் கிடைக்கும். கூல்பேட் நிறுவனம் அதன் முந்தைய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 8.0 அப்டேட் செலுத்துமா என்பது பற்றிய விவரங்கள் இல்லை.

எசென்ஷியல் பிஎச்-1

எசென்ஷியல் பிஎச்-1

ஆண்டி ரூபின், ஆண்ட்ராய்டு இணை நிறுவனர் - ஒரு சில மாதங்களுக்கு முன் எசென்ஷியல் பிஎச்-1 ஸ்மார்ட்போனை அறிவித்தார். கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு 8.0 வலைப்பதிவு இடுகையானது ஓரியோ மேம்பாடு சார்ந்து கூகுள் இந்த இணைந்து பணியாற்றும் நிறுவனங்களில் எஎசென்ஷியலும் ஒன்று என்று அறிவித்துள்ளதின் மூலம் இக்கருவியில் ஓரியோ அப்டேட் கிடைக்கும் என்பதை அறியமுடிகிறது

எச்டிசி

எச்டிசி

எச்டிசி யூ11 ஸ்மார்ட்போன் ஆனது ஓரியோ அப்டேட் பெறும் என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட எச்டிசி யூ அல்டரா மற்றும் யூ பிளே ஆகியவைகளும் ஓரியோ அப்டேட் பெரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. சில வதந்திகள் எச்டிசி 10, எச்டிசி10 இவோ, எச்டிசி டிசயர் 10 ப்ரோ மற்றும் எச்டிசி டிசயர் 10 லைஃப் ஸ்டைல் ஆகிய கருவிகளும் அப்டேட் பெறும் என்று கூறுகின்றன.

அசுஸ்

அசுஸ்

சென்போன் 4 4 தொடர் ஸ்மார்ட்போன்கள் துவக்கப்படும் போது, ஆஸஸ் அதன் தற்போதைய வரிசை-சாதனங்களில் ஆண்ட்ராய்டு 8.0 அப்டேட் கொண்டுவரப்படுமென அறிவித்தது. அதாவது சென்போன் 4, சென்போன் 4 ப்ரோ, சென்போன் 4 மேக்ஸ், சென்போன் 3, சென்போன் 3 டீலக்ஸ், சென்போன் 3 மேக்ஸ் மற்றும் சென்போன் 3 லேசர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் அடங்கும்.

சாம்சங்

சாம்சங்

சாம்சங் கேலக்ஸி எஸ்8+, கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி எஸ்7, கேலக்ஸி எஸ்7 எட்ஜ், கேலக்ஸி நோட் 7 பேன் எடிஷன், கேலக்ஸி டேப் எஸ்3 மற்றும் வரவிருக்கும் கேலக்ஸி நோட் 8 ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் பெறும். ஆனால் 2017 ஏ மற்றும் ஜே தொடர் கருவிகளில் மேம்படுத்தல் இருக்குமா என்பதில் உறுதி இல்லை.

சோனி

சோனி

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம், எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ், எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட், எக்ஸ்பீரியா எக்ஸ் காம்பாக்ட், எக்ஸ்பீரியா எக்ஸ் பெர்பார்மன்ஸ் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 மற்றும் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ 1 அல்ட்ரா ஆகிய சாதனங்கள் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லெனோவா

லெனோவா

லெனோவா சமீபத்தில் வெளியிடப்பட்ட கே8 நோட் சாதனத்தில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் இருக்குமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், லெனோவா சமீபத்தில் அறிமுகம் செய்த ப்ஹாப் தொடர் ஸ்மார்ட்போன்களில் நௌவ்கட் அப்டேட் கிடைக்குமென அறிவித்துள்ளது.

எல்ஜி

எல்ஜி

எல்ஜி ஜி 6 மற்றும் எல்ஜி க்யூ6 போன்ற எல்ஜி நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் ஓரியோ அப்டேட்தனை நிச்சயம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக, எல்ஜி ஜி 5 மற்றும் எல்ஜி வி 20 ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஓரியோவுக்கு புதுப்பிக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Android Oreo: The list of phones that will get 8.0 update, check if yours is here. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X