புதிய மாறுபாடுகளுடன் சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ.!
சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
சாம்சங் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட் தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது, மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் வெளியீடு சார்ந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்சமயம் வெளிவந்துள்ளது, அதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC 2018)-நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டி.ஜெ. கோ தகவல் தெரிவித்தார்.
சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ கடந்த வருடம் அண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 16எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 172 கிராம் எடைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ :
சாம்சங் கேலக்ஸி சி7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஆண்ட்ராய்டு :
சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி சி7 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3300எம்ஏஎச்:
சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications