ஆண்ட்ராய்டு மொபைல்களில் வைரஸ்...!

By Keerthi
|

தற்போது ஆண்ட்ராய்டு மொபைலானது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனலாம்.

இதனால் இவற்றில் பரவும் வகையில் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளை உருவாக்குவது ஹேக்கர்களுக்கு மிக எளிதாக உள்ளது. சென்ற ஆண்டில் மட்டும் மால்வேர் புரோகிராம்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு பெருகியுள்ளது.

ஏற்கனவே 30,000 என்ற எண்ணிக்கையில் இருந்த இவை, இக் காலத்தில் 1,75,000 என்றளவில் உயர்ந்தன. இவை மிகவும் ஆபத்தானவையாகவும் உலவி வருகின்றன.

தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புதல், தொடர்ந்து எரிச்சலூட்டும் வகையில் விளம்பரங்களைக் காட்டுதல், ஸ்பேம் எனக் கண்டறிந்து விலக்க முடியாத வகையில், குப்பை தகவல்களைத் தருதல் என இவற்றின் செயல்பாடுகள் உள்ளன.

மொபைல் வழி பேங்க் அக்கவுண்ட் செயல்பாடுகளை மேற் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, 2015 ஆம் ஆண்டில், இவற்றில் இடை புகுந்து நிதி மாற்றம் குறித்த தகவல்களைத் திருடி, பயனாளர்களுக்கு நிதி இழப்பு வரை மேற்கொள்ளும் வைரஸ்கள் நிறைய வெளியாகலாம் எனவும் கருதப்படுகிறது.

ஆண்ட்ராய்டு மொபைல்களில் வைரஸ்...!

மேலும் 2013ஆம் ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 5 இலட்சம் வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் இருந்தன. 2015ல் இவை மூன்று மடங்காகப் பெருகும் எனவும் அறியப் பட்டுள்ளது. எப்படி விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் களில் இடம் பிடித்ததோ, அதே போல ஆண்ட்ராய்ட் சிஸ்டம், மொபைல் போன்களில் இடம் பிடிக்கும்.

எனவே, மால்வேர் புரோகிராம்கள் வடிவமைப்பவர்கள், இவற்றை தங்கள் இலக்காகக் கொண்டு இயங்கி வருகின்றனர். மேலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வடிவமைப்பின் குறியீடுகள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதுவும் இதில் அவர்களுக்குச் சாதகமான அடித்தளத்தைக் கொடுக்கிறது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

மேலும் உங்களது மொபைலில் புதிய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்கையில் காட்டப்படும் எச்சரிக்கை செய்தி பெட்டியினையும், அதில் உள்ள தகவல்களையும் தெளிவாகக் காட்டும் வகையில் கூகுள் தந்து வருகிறது. அனுமதி கேட்கும் வழிகள் எந்த மறைமுக செய்தியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்பவர், ஒருமுறைக்கு பல முறை சிந்தித்த பிறகே, அதனை இன்ஸ்டால் செய்திடுவார்.

ஆனால், வைரஸ் மற்றும் மால்வேர் வடிவமைப்பவர்கள் இதற்கெல்லாம் தயங்குபவர்களாக இருக்கப் போவதில்லை. எனவே, நாம் தான் அதிகக் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X