முதல் லட்டு ரூ.6,000/-க்கு நோக்கியா 2; இரண்டாவது லட்டு - நோக்கியா 9.!

|

கடந்த மாதம் நிகழ்ந்த நோக்கியா 8 அறிமுக விழாவின் போது வெளியீட்டு நிகழ்வின் போது, எச்எம்டி க்ளோபல் நிறுவனம் அடுத்தபடியாக, ஒரு பெரிய திரை மாதிரியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியது. அது நோக்கியா 9 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் தருணத்தில் ​​நம்பகமான சீன லீக்ஸ் தகவலொன்று நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் ஸ்கெட்ச்தனை வெளியிட்டுள்ளது.

முதல் லட்டு ரூ.6,000/-க்கு நோக்கியா 2; இரண்டாவது லட்டு - நோக்கியா 9.!

வெளியான படத்தில், நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் பின்புறத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால் வெளியான புகைப்படத்தில் நோக்கியா 2 ஸ்மாட்போனும் இடம்பெற்றுள்ளது. ஆம், சரிதான் - நோக்கியா ரசிகர்களுக்கான இரண்டாவது லட்டு.!

சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் நோட் 8  போலவே

சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் நோட் 8 போலவே

வெளியான ஸ்கெட்சில் இருந்து கருவிகளின் சில அடிப்படை அம்சங்களை காணமுடிகிறது. நோக்கியா 9 ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், ஒரு 3டி கண்ணாடி கேடயம் கொண்டுள்ளதுபோல் தெரிகிறது. அதாவது, சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் நோட் 8 தொடர்களின் வளைந்த உடலை போலவே காட்சியளிக்கிறது.

வித்தியாசமான இரட்டை கேமரா

வித்தியாசமான இரட்டை கேமரா

அதன் பின்பகுதியில் உள்ள இரட்டை கேமரா தொகுதி சார்ந்த பணிகள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. எல்இடி ப்ளாஷ் வலது பக்கத்தில் அமைந்துள்ளது மற்றும் கைரேகை சென்சார் செயலூக்கத்துடன், இடையில் போதுமான இடைவெளியுடன் கேமரா தொகுதி கீழே வைக்கப்பட்டுள்ளது. இதனால் விரல்களை கொண்டு அதை எளிதாக அணுக முடியும் அதேசமயம் கேமரா சென்சார் மீது விரல்கள் படாது.

5.5 அங்குல அல்லது 5.7 அங்குல திரை

5.5 அங்குல அல்லது 5.7 அங்குல திரை

இதுவரை வெளியான ஒட்டுமொத்த தகவலின் கீழ் நோக்கியா 9 ஆனது வளைந்த பெசஸல்லெஸ் டிஸ்பிளே, க்யூஎச்டி (2கே: 2560x1440பி) தீர்மானம் கொண்ட 5.5 அங்குல அல்லது 5.7 அங்குல திரை அளவு உடன் சூப்பர் அமோ எல்இடி டிஸ்பிளே கொண்டுருக்கலாம் என கூறப்படுகிறது.

5 அடி ஆழம் வரை மூழ்கியபடி

5 அடி ஆழம் வரை மூழ்கியபடி

மேலே குறிப்பிட்டுள்ளபடி, முன்பக்கம் மற்றும் பின்புறத்தில் முறையே 3டி கண்ணாடி கவசம் மற்றும் உலோக ஷெல் கொண்டுருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடன் இக்கருவி ஐபி68 நீர் மற்றும் தூசி-எதிர்ப்பு சான்றிதழ் பெற்றுள்ளதென்றும், அதனால் நீச்சல் குளத்தில் (நன்னீர், கடல் இல்லை) 5 அடி ஆழம் வரை மூழ்கியபடி புகைப்பட பதிவுகளை நிகழ்த்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

கார்ல்-ஜீஸ் ஒளியியல்

கார்ல்-ஜீஸ் ஒளியியல்

நோக்கியா 9 சாதனத்தின் கைரேகை ஸ்கேனர் பின்புறம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதன் முன்னணி-கேமரா ஒரு ஐரிஸ் ஸ்கேனராக வேலை செய்யலாம். கேமரா துறையை பொறுத்தமட்டில், பின்பக்கம் 13 எம்பி இரட்டை சென்சார் (கார்ல்-ஜீஸ் ஒளியியல் கொண்டவை) முன்பக்கம், ஒரு நிலையான 13எம்பி சென்சார் கொண்டிருக்க வேண்டும்.

3000க்கும் அதிகமான பேட்டரித்திறன்

3000க்கும் அதிகமான பேட்டரித்திறன்

க்வால்காமின் மிக சக்திவாய்ந்த செயலி ஸ்னாப்ட்ராகன் 835 ஆக்டா-கோர் உடனான 6ஜிபி / 8ஜிபி ரேம், 128ஜிபி உள் சேமிப்பு மற்றும் 3000க்கும் அதிகமான பேட்டரித்திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக நோக்கியா 9 ஆனது மூன்று மாறுபாடுகளில் வெளியாகலாமென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விலையை பொறுத்தவரை, நோக்கியா 9 சுமார் ரூ.45,030/- என்ற புள்ளியை எட்டலாம்.

நோக்கியா 2 அம்சங்கள்

நோக்கியா 2 அம்சங்கள்

மறுகையில் உள்ள நோக்கிய 2 அம்சங்களை பொறுத்தமட்டில், இது 720x1,280 பிக்ஸல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 212 செயலி, 1 ஜிபி ரேம், ப்யூர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி ஆகிய பிராதன அம்சங்களை கொண்டுருக்கலாம்.

ரூ.6,000/-

ரூ.6,000/-

கேமராவைப் பொறுத்தவரை, 8எம்பி முதன்மை கேமரா மற்றும் 5எம்பி முன்பக்க கேமரா எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பட்ஜெட் ஆண்ட்ராய்டு கருவியான நோக்கியா 2 ஆனது, நோக்கியா 9 ஸ்மார்ட்போனை போலவே மொத்தம் நான்கு மாறுபாடுகளில் விற்பனைக்கு வரலாம். வருகிற அக்டோபர் 5 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, ரூ.6,000/- என்ற விலைக்கு நோக்கியா 2 சந்தையை எட்டலாம்.

Best Mobiles in India

English summary
Android flagship Nokia 9 gets spied along with budget Nokia 2; design elements, camera details leaked. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X