உங்களுக்கு ஓரியோ அப்டேட் ஒருபோதும் கிடைக்காது என்பதற்கான 5 காரணங்கள்.!

|

கடந்த செய்வாய்க்கிழமையன்று, கூகுள் நிறுவனம் அதன் சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்பான ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஆண்ட்ராய்டின் முந்தைய பதிப்புகள் போலவே ஆண்ட்ராய்டு ஓரியோவும் தற்போதுள்ள ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு மிதப்புள்ள வேகத்தில் அடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உங்களுக்கு ஓரியோ அப்டேட் ஒருபோதும் கிடைக்காது என்பதற்கான 5 காரணங்கள்!

குறிப்பாக பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல் பயனர்கள், நௌவ்கட் பயனர்கள் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவை ஏர் (ஓடிஏ ) அப்டேட் மூலம் வரும் நாட்களில் பெறுவார்கள். எல்லா பயனர்களும் ஒரே நேரத்தில் அதைப் பெற போவதில்லை என்றாலும் இந்த மேம்படுத்தல் ஏற்கனவே சில தொலைபேசிகளை அடைந்துவிட்ட நிலையில் ஒரு வாரம் அல்லது அதற்கும் மேலான காலத்தில் அனைத்து பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல் பயனர்களும் ஓரியோ அப்டேட் பெறுவார்கள் என்பது உறுதி.

சற்று சிக்கலானதாகவே இருக்கிறது

சற்று சிக்கலானதாகவே இருக்கிறது

கூகுள் சாதனங்களை பொறுத்தமட்டில் ஓரியோ அப்டேட் ஆனது மிகவும் நன்றாக போய்க்கொண்டிருக்க, மற்ற உற்பத்தியாளர்களிடமிருந்து வெளியாகும் கலவை சாதனங்களை பொறுத்தவரை ஓரியோ அப்டேட் சற்று சிக்கலானதாகவே இருக்கிறது.

இனி கிடைக்கவே வாய்ப்பில்லை

இனி கிடைக்கவே வாய்ப்பில்லை

உதாரணமாக நோக்கியா 6, கேலக்ஸி எஸ்8 உட்பட பல தொலைபேசிகள் ஓரியோ புதுப்பிப்பைப் பெறுமென்று அதன் நிறுவனங்கள் தெளிவாக பதிலளிக்கும் போதும் கூட, இன்னும் உங்களுக்கு ஓரியோ அப்டேட் சார்ந்த எந்த விதமான நடவடிக்கைகளும் நிகழ்த்தப்படவில்லை என்றால் - ஓரியோ அப்டேட் ஆனது இதுவரை கிடைக்கவில்லை என்பதற்கும் இனி கிடைக்கவே வாய்ப்பில்லை என்பதற்கான 5 காரணங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

காரணம் #05

காரணம் #05

உங்கள் தொலைபேசி கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது அல்ல - இது பெரும்பாலான மக்களுக்கு இது நிகழ்வதாகும். கூகுள் தொலைபேசிகளான பிக்சல் மற்றும் நெக்ஸஸ் கருவிகள் தான் எந்தவொரு ஆண்ட்ராய்டு மேம்படுத்தலையும் முதலில் பெறுகின்றன. பிக்சல் கருவிகளுக்கு ஓரியோ அப்டேட் ஏற்கனவே கிடைத்துவிட்ட நிலையில் நெக்ஸஸ் தொலைபேசிகளுக்கு வரும் வாரங்களில் அல்லது ஒரு மாதத்திற்குள் உறுதியாக அப்டேட் கிடைக்கும்.

காரணம் #04

காரணம் #04

உங்கள் மொபைல் ஸ்டாக் ஆண்ட்ராய்டின் கீழ் இயங்கவில்லை அதாவது கூகுள் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக ஓஎஸ்-தனை பெறாதகருவிகள். பொதுவாக, ஸ்டாக் ஆண்ட்ராய்டின் கீழ் இயங்கும் தொலைபேசிகளுக்கு புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் விரைவாக கிடைப்பதை காண முடிகிறது.

சமீபத்திய தொலைபேசிகளுக்கு

சமீபத்திய தொலைபேசிகளுக்கு

எடுத்துக்காட்டுக்கு, ஓரியோ அப்டேட் வழக்கில் ஸ்டாக் ஆண்ட்ராய்டின் கீழ் தொடங்கப்பட்டது என்று அனைத்து சமீபத்திய தொலைபேசிகளுக்கும் அப்டேட் கிடைக்கும். அதாவது - நோக்கியா 5, நோக்கியா 6 மற்றும் நோக்கியா 3, மோட்டோ இசெட்2 பிளே, ஒன்ப்ளஸ் 3, ஒன்ப்ளஸ் 3டி, ஒன்ப்ளஸ் 5, ஆகிய கருவிகள் ஸ்டாக் ஆண்ட்ராய்டின் கீழ் இயங்கும் கருவிகளாகும்.

காரணம் #03

காரணம் #03

உங்கள் தொலைபேசி ஒரு இந்திய பிராண்ட் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தால் உங்கள் நிலைமை மிகவும் மோசம் தான். ஏனெனில் பொதுவாகவே இந்திய தொலைபேசி தயாரிப்பாளர்கள் ஆண்ட்ராய்டு அப்டேட்களை பெறுவதில் மிகவும் மோசமாக செயல்படுகின்றன. ஒருவேளை, நீங்கள் ஒரு இந்திய பிராண்ட் தொலைபேசியைப் பயன்படுத்தினால், நீங்கள் ஆண்ட்ராய்டு ஓரியோ மேம்படுத்தலுக்கு காத்திருப்பது வீண் தான்.

காரணம் #02

காரணம் #02

உங்கள் தொலைபேசி சியோமி அல்லது ஹூவாய் போன்ற சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது என்றால் இந்திய பிராண்ட் பயன்படுத்தும் பயனர்களின் அதே நிலைமை தான் உங்களுக்கும். சியோமி மற்றும் ஹூவாய் போன்ற பெரிய உற்பத்தியாளர்கள் தங்கள் தொலைபேசிகளுக்கு ஆண்ட்ராய்டு பதிப்பு புதுப்பித்தல்களைக் கொண்டு வருவதற்கு ஒரு வருடம் வரை ஆகலாம்.

ஒரு சில தொலைபேசிகளுக்கு மட்டுமே

ஒரு சில தொலைபேசிகளுக்கு மட்டுமே

இன்னும் சொல்லப்போனால் ஒரு வருட காலத்திற்கு பின்னரும் கூட தொலைபேசிகள் அனைத்தும் புதுப்பிப்பு பெறாமல் போகலாம். விவோ, ஓப்போ, சியோமி, ஹூவாய், இசெட்டிஇ மற்றும் பிற சீன நிறுவனங்களினால் தொடங்கப்பட்ட ஒரு சில தொலைபேசிகளுக்கு மட்டுமே ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

காரணம் #01

காரணம் #01

உங்கள் தொலைபேசி வாங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றால் ஓரியோ அப்டேட்டில் சிக்கல்கள் இருக்கலாம். புதிய தொலைபேசிகளுக்கே புதுப்பிப்புகள் வரவில்லை என்கிற போது, பழைய தொலைபேசிகள் சற்று நம்பிக்கையற்றதாகவே காணப்படுகிறது.

அப்டேட் பெறாது என்பது நிச்சயம்

அப்டேட் பெறாது என்பது நிச்சயம்

நீங்கள் 6 மாதங்களுக்கு முன்பு வாங்கிய ஒரு தொலைபேசியைப் பயன்படுத்தினால், அது ஒரு உயர்-இறுதி மோட்டோ ஸ்மார்ட்போன் அல்லது கூகுள் பிக்சல் / நெக்ஸஸ் போனாக இல்லாவிட்டால் அதற்கு ஓரியோ அப்டேட் கிடைக்காது. அதிலும் உங்கள் கருவி ஒரு நெக்ஸஸ் அல்லது பிக்சல் தொலைபேசியாக அல்லது கேலக்ஸி எஸ்7 போன்ற பிரீமியம் சாதனமாக இல்லாவிட்டால் - தொலைபேசி ஒரு வருடம் பழமையானதாக இருந்தால் - அதற்கு ஆண்ட்ராய்டு ஓ அப்டேட் பெறாது என்பது நிச்சயம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Android 8 Oreo: 5 reasons why your phone hasn't got it and may never get it. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X