ஆண்ட்ராய்டு 8.0 ஓ : உங்கள் மொபைலை எப்போது வந்தடையும்.?

Written By:

கூகுள் நிறுவனம், அதன் வழக்கமான நான்கு புதிய டெவெலப்பர் மாதிரிகளில் பரிசோதனைகளை முடித்துக்கொண்ட பின்னர், அதன் அடுத்த ஆண்ட்ராய்டு பதிப்பை பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யுமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த பதிப்பான ஆண்ட்ராய்டு 8.0 ஓ-வில் அப்படி நடக்காது என்பது போல தெரிகிறது. அதற்கு காரணம், ஆண்ட்ராய்டு ஓ ஏற்கனவே மூன்றாம் பீட்டாவிற்குப் கிடைக்கப்பெறுவது தான்.

அதாவது, கூகுள் நிறுவனம் தற்போது சில பொது பீட்டா முன்னோட்டங்களில் ஈடுபட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஓ ஆனது தற்போது சில தகுதியான சாதனங்களில் இயங்குகிறது. இதன் மூலம் அடுத்த இயங்குதள அப்டேட்டிற்கான அதிகாரப்பூர்வ வெளியீடு தொலைவில் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எந்தெந்த சாதனங்கள் முதலில் பெறும்.??

எந்தெந்த சாதனங்கள் முதலில் பெறும்.??

உலகின் மாபெரும் தேடல்பொறி நிறுவனமான கூகுள், அதன் ஆண்ட்ராய்டு 8.0 ஓ வெளியீட்டு தேதியை இன்னும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் வெளியான அறிக்கைகள் அது ஆகஸ்ட் முதல் வாரத்தில் அல்லது குறைந்தபட்சம் மாதத்தின் முதல் பாதியில் நடக்கலாம் என்று கூறுகின்றன. அப்படி வெளியாகும் பட்சத்தில் எந்தெந்த சாதனங்களில் முதலில் ஆண்ட்ராய்டு ஓ என்ற புதிய ஃப்ரிம்வேரை பெறும்.?

கூகுள்

கூகுள்

எந்தவொரு ஒரிஜினல் எக்யூப்மென்ட் மெனுபேக்டர்களும் (OEM), அதாவது அசல் கருவி உற்பத்தியாளர்களும் ஆண்ட்ராய்டு 8.0 ஓ மேம்படுத்தல் அட்டவணையை வெளிப்படுத்தவில்லை என்கிற போதிலும் இது முதலில் கூகுள் பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல், நெக்சஸ் 5எக்ஸ், நெக்ஸஸ் 6பி, பிக்சல் சி மற்றும் நெக்ஸஸ் பிளேயர் ஆகிய கருவிகளில் இடம்பெறலாம்.

ஒன்ப்ளஸ்

ஒன்ப்ளஸ்

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஒன்ப்ளஸ் அதன் ஒன்ப்ளஸ் 3, ஒன்ப்ளஸ் 3டி மற்றும் தற்போதைய தலைமை சாதனமான ஒன்ப்ளஸ் 5 ஆகியவைகளில் ஆண்ட்ராய்டு 8.0 ஓ மேம்படுத்தல் பெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய ஓஎஸ் உருட்டல் துவங்கும் என்றும் அறிவித்துள்ளது.

நோக்கியா

நோக்கியா

நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய புதிய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 8.0 ஓ மேம்படுத்தல் கிடைக்கும் என்று எச்எம்டி க்ளோபல் அறிவித்துள்ளது. இருப்பினும், அப்டேட் சார்ந்த எந் தேதியையும் நிறுவனம் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

எல்ஜி

எல்ஜி

எல்ஜி நிறுவனத்தை பொறுத்தமட்டில் அதன் வரவிருக்கும் எல்ஜி வி 30 ஆனது ஆண்ட்ராய்டு 8.0 ஓ இயங்குதளம் கொண்டு வெளியிடப்பட்ட முதல் சாதனமாக இருக்கக்கூடும். இதில் எல்ஜி ஜி 6, எல்ஜி வி 20 மற்றும் எல்ஜி ஜி 5 ஆகிய கருவிகளும் அடங்கும். எல்ஜி ஜி 6 மற்றும் எல்ஜி வி 20 ஆகிய கருவிகளில் அப்டேட்தனை இந்த ஆண்டு இறுதிக்குள் பெறலாம், ஆனால் எல்ஜி ஜி5-க்கு அடுத்த 2018-இல் தான் வரக்கூடும்.

எச்டிசி மற்றும் சோனி

எச்டிசி மற்றும் சோனி

இது தவிர்த்து, பிற மொபைல் போன் நிறுவனங்களான எச்டிசி மற்றும் சோனி ஸ்மார்ட்போன்களிலும் இந்த அப்டேட் நிகழும். அதாவது முறையே எச்டிசி யூ11, எச்டிசி10 மற்றும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் ஆகிய கருவிகளில் இந்த ஆண்டின் இறுதியில் மென்பொருள் புதுப்பிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங்

சாம்சங்

சாம்சங் நிறுவனத்தை பொறுத்தமட்டில் அதன் பிளாக்ஷிப் கருவிகளில் அப்டேட் கிடைக்கும் என்பது தெளிவாக உள்ளது. துரதிருஷ்டவசமாக, சாம்சங் நிறுவனம் கடந்த காலத்தில் அதன் சாதனங்களுக்கு ஓஎஸ் புதுப்பிப்புகளை கொண்டு வரவில்லை, அந்த போக்கு தொடரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கேலக்ஸி எஸ்6 மற்றும் கேலக்ஸி எஸ்8+ ஆகிய சாதனங்களில் 2018-ஆம் ஆண்டின் துவக்கத்தில் அப்டேட்களை பெறலாம். 2016-ஆம் ஆண்டில், கேலக்ஸி எஸ்7 மற்றும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ், கேலக்ஸி எஸ்6, கேலக்ஸி எஸ்6 எட்ஜ் மற்றும் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் ப்ளஸ், கேலக்ஸி ஏ, சி மற்றும் ஜே தொடரின் பிரபலமான சாதனங்களும் இந்த புதிய இயங்குதளத்தை பெறலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Android 8.0 O release date coming: When can you expect the new firmware for your device? Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot