ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் அக்டோபரில் வருகிறது!!!

Posted By:

ஆன்டிராய்ட் நிறுவனத்தை கூகுள் வாங்கிய பிறகு பல புதிய வெர்ஷன் ஒஎஸ்களை வெளியிட்டது. உலகில் உள்ள மொத்த ஸ்மார்ட்போன்களில் கிட்டதிட்ட 80 சதவீத ஸ்மார்ட்போன்கள் ஆன்டிராய்ட் ஓஎஸ்களாள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்க்கு கூகுள் நிறுவனம் ஆன்டிராய்ட் மொபைல் ஓஎஸ்யை உலக அளவில் பிரபலமாக்கியுள்ளது.

அண்மையில் தான் ஆன்டிராய்ட் நிறுவனம் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்யை வெளியிட்டது. ஆன்டிராய்டின் அடுத்த வெர்ஷன் ஓஎஸ் ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் தான் கூகுள் நிறுவனம் அதிகாரபூர்வமாக முன்பே அறிவித்திருந்தது. நெஸ்ட்ளே(nestle) நிறுவனத்துடன் கூகுள் இணைந்து ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் மொபைல் ஓஎஸ்யை வெளியிட உள்ளது என்பது தெரிந்ததே.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் அக்டோபரில் வருகிறது!!!

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

இப்பொழுது நெஸ்ட்ளே நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் பற்றிய வெளியிட்டுள்ளது. ஆன்டிராயட் 4.4 கிட் காட் எப்பொழுது வெளிடப்படும் என்ற கேள்விக்கு அக்டோபரில் வெளிவரும் என்று நெஸ்ட்ளே அறிவித்துள்ளது. கூகுளின் அடுத்த ஓஎஸ்க்கு ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் என்ற பெயர் வந்ததற்க்கான காரணம் என்ன என்பதையும் பார்ப்போம்.

இதுவரை ஆன்டிராய்ட் ஓஎஸ்களுக்கு கப்கேக் (Cupcake), டூநட் (Donut), எக்லையர் (Eclair), ப்ரோயோ (Froyo), ஜிஞ்சர்பிரட் (Gingerbread), ஹனிகோம்ப் (Honeycomb), ஐஸ்கிரீம் சான்ட்விச் (Ice Cream Sandwich), and ஜெல்லிபீன் (Jelly Bean) என பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் எல்லோருக்கும் பிடித்த சாக்லேட்டின் பெயர் மட்டும் இடம் பெறாமல் இருந்தது அதனால் தான் இப்பொழுது அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என கூகுள் தெரிவித்துள்ளது. கூகுளின் அடுத்த நெக்சஸ் ஸ்மார்ட்போன்கள் ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் ஓஎஸ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot