Home
Mobile

ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் கூகுளின் அடுத்த ஓஎஸ்!!!

By Prabakaran

ஆன்டிராய்ட் நிறுவனத்தை கூகுள் வாங்கிய பிறகு பல புதிய வெர்ஷன் ஒஎஸ்களை வெளியிட்டது. உலகில் உள்ள மொத்த ஸ்மார்ட்போன்களில் கிட்டதிட்ட 80 சதவீத ஸ்மார்ட்போன்கள் ஆன்டிராய்ட் ஓஎஸ்களாள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்க்கு கூகுள் நிறுவனம் ஆன்டிராய்ட் மொபைல் ஓஎஸ்யை உலக அளவில் பிரபலமாக்கியுள்ளது.

அண்மையில் தான் ஆன்டிராய்ட் நிறுவனம் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்யை வெளியிட்டது. இப்பொழுது தனது அடுத்த வெர்ஷன் ஓஎஸ்ன் பெயரையும் கூகுள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் தான் கூகுளின் அடுத்த மொபைல் ஓஎஸ்ன் பெயர்.

ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் கூகுளின் அடுத்த ஓஎஸ்!!!

நெஸ்ட்ளே(nestle) நிறுவனத்துடன் கூகுள் இணைந்து ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் மொபைல் ஓஎஸ்யை வெளியிட உள்ளது. ஆன்டிராய்டின் அடுத்த ஓஎஸ் க்கு இந்த பெயரை நெஸ்ட்ளே நிறவனத்துடன் இணைந்து வைத்திருப்பது சிறப்பாக உள்ளது, இதை விட ஒரு நல்ல பெயரை எங்களால் கற்பனை செய்ய முடியவில்லை என ஆன்டிராய்டின் மார்கெட்டிங் டைரெக்டர் மார்க் வால்னெர்பெர்க் தெரிவித்துள்ளார்.

நெஸ்ட்ளே(nestle) நிறுவனத்தின் மார்கெட்டிங் தலைமை அதிகரியான பாட்ரிஸ் புலா கூறுகையில், உலகத்தின் மிக பிரபலமான மொபைல் ஓஎஸ் உடன் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் பெயர் காரணத்தையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆன்டிராய்ட் ஓஎஸ் கொண்ட மொபைல்கள் அல்லது டேப்லெட்கள் போன்ற சாதனங்கள் நமது வாழ்க்கையை இனிப்பாக்குகின்றன. அதனால்தான் இதுவரை ஆன்டிராய்ட் ஓஎஸ்களுக்கு கப்கேக் (Cupcake), டூநட் (Donut), எக்லையர் (Eclair), ப்ரோயோ (Froyo), ஜிஞ்சர்பிரட் (Gingerbread), ஹனிகோம்ப் (Honeycomb), ஐஸ்கிரீம் சான்ட்விச் (Ice Cream Sandwich), and ஜெல்லிபீன் (Jelly Bean) என பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் எல்லோருக்கும் பிடித்த சாக்லேட்டின் பெயர் மட்டும் இடம் பெறாமல் இருந்தது அதனால் தான் இப்பொழுது அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என இந்நிறுவனம் கூறியது. கூகுளின் ஸ்மார்ட்வாட்ச் ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் ஓஎஸ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X