கேலக்ஸி எஸ்-3யில் ஆன்ட்ராய்டின் லேட்டஸ்டு அப்டேஷன்?

|

கேலக்ஸி எஸ்-3யில் ஆன்ட்ராய்டின் லேட்டஸ்டு அப்டேஷன்?
ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷனை கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனிற்கு வழங்குகிறது சாம்சங் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் நமது நாட்டில் பல வண்ணங்களில் அறிமுகம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த வகையில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும், இந்த ஸ்மார்ட்போனிற்கு

இருக்கும் வரவேற்பும் எப்போதுமே அதிகம் என்று கூறலாம்.

இந்தியாவில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனிற்கு, ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷன் எப்போது வழங்கப்படும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனிற்கு கூடிய விரைவில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழங்கப்படும் என்று கருதப்படுகிறது.

ஆனால் இந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் ஜெல்லி பீன் அப்டேஷன் அளிக்கப்படும் தேதி பற்றிய விவரங்கள் இன்னும் சரிவர அறிமுகம் செய்யப்படவில்லை. இன்னும் சில மாதங்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனிற்கு அப்டேஷன் வழங்குப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கேலக்ஸி நோட்-2

ஃபேப்லட்டின் வெளியீட்டில் சாம்சங் நிறுவனம் முழுமையாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X