ஒன் எக்ஸ் போனில் ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அப்டேட் செய்யும் எச்டிசி

Posted By: Karthikeyan
ஒன் எக்ஸ் போனில் ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அப்டேட் செய்யும் எச்டிசி

எச்டிசியின் ஒன் எக்ஸ் என்ற ஸ்மார்ட்போனை பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த போன் சிறப்பான சேவையை தனது ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது இந்த போனின் தரத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்பதற்காக இந்த போனில் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அப்டேட் செய்ய இருக்கிறது.

இந்த செய்தி எச்டிசி ஒன் எக்ஸ் போனை பயன்படுத்துவோருக்கு கண்டிப்பாக இனிப்பான செய்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்த அப்டேட் இந்த வரும் அக்டோபரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஜெல்லி பீன் அப்டேட் மூலம் இந்த ஒன் எக்ஸ் போன் மேலும் மிக விரைவாக இயங்கும் என்று கருதப்படுகிறது. அதோடு இதன் இயக்கமும் தரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த அப்டேட் மூலம் இன்டர்னல் மெமரி, வைபை, மல்டி டச் வசதி, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி மற்றும் ரேடியோ போன்ற வசதிகள் இன்னும் பொலிவு பெறும் என்று நம்பப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot