Android 16 OS: கூகுள் பிக்சல் முதல் சாம்சங் கேலக்ஸி வரை.. எந்தெந்த மாடல்களில் கிடைக்கும்?
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) ஆனது கூகுள் பிக்சல் மாடல்களில் கிடைக்க தொடங்கிவிட்டது. சாம்சங் கேலக்ஸி, ஒன்பிளஸ், மோட்டோரோலா, ஓப்போ, விவோ போன்ற மற்ற முக்கிய பிராண்ட்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பிராண்ட்களில் எந்தெந்த மாடல்களில் எதிர்பார்க்க முடியும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். இது அதிகார்பூர்வ லிஸ்ட் இல்லையென்றாலும், இந்த மாடல்களுக்கு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று அவை வெளியானபோது, அந்தந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. ஆகவே, இந்த மாடல்களில் கட்டாயம் கிடைக்கும்.
கூகுள் பிக்சல் மாடல்கள் (Google Pixels Models):
கூகுள் பிக்சல் 6, கூகுள் 6 ப்ரோ, கூகுள் பிக்சல் 6ஏ, கூகுள் பிக்சல் 7, கூகுள் பிக்சல் 7 ப்ரோ, கூகுள் பிக்சல் 7ஏ, கூகுள் பிக்சல் 8, கூகுள் பிக்சல் 8 ப்ரோ, கூகுள் பிக்சல் 8ஏ, கூகுள் பிக்சல் 9, கூகுள் பிக்சல் 9 ப்ரோ, கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல், கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு, கூகுள் பிக்சல் 9ஏ, கூகள் பிக்சல் ஃபோல்டு, கூகுள் பிக்சல் டேப்லெட் மாடல்கள்.

சாம்சங் கேலக்ஸி மாடல்கள் (Samsung Galaxy Models):
சாம்சங் கேலக்ஸி எஸ்25, சாம்சங் கேலக்ஸி எஸ்25பிளஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா, சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மாடல்கள். அதேபோல சாம்சங் கேலக்ஸி எஸ்24 மாடல்கள், சாம்சங் கேலக்ஸி எஸ்23 மாடல்கள், சாம்சங் கேலக்ஸி எஸ்22 மாடல்களில் கிடைக்க இருக்கிறது. சாம்சங் கேலஸ்கி எஸ்21 எப்இ மாடலில் கிடைக்க இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் எஸ்இ, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6, ஃபிளிப் 6 மாடல்கள். சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5, ஃபிளிப் 5 மாடல்கள், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4, ஃபிளிப் 4 மாடல்களில் வர இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10பிளஸ், அல்ட்ரா, எப்இ & எப்இபிளஸ் ஆகிய டேப்லெட்களில் கிடைக்க இருக்கிறது.

இதேபோல கேலக்ஸி டேப் எஸ்9 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 மாடல்களில் வர இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ73, கேலக்ஸி ஏ56, கேலக்ஸி ஏ55, கேலக்ஸி ஏ54, கேலக்ஸி ஏ53, கேலக்ஸி ஏ36, கேலக்ஸி ஏ35, கேலக்ஸி ஏ34, கேலக்ஸி ஏ33, கேலக்ஸி ஏ26, கேலக்ஸி ஏ25, கேலக்ஸி ஏ24, கேலக்ஸி ஏ23 ஆகிய மாடல்களில் கிடைக்க இருக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட், ஓப்பன், பேட் மாடல்கள் (OnePlus Nord, Open, Pad Models):
ஒன்பிளஸ் 13, 13எஸ், 13ஆர், 13டி மாடல்கள். ஒன்பிளஸ் 12, 12ஆர், ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் 11ஆர் மாடல்கள். ஒன்பிளஸ் நோர்ட் 4, ஒன்பிளஸ் நோர்ட் 3, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் மாடல்கள். ஒன்பிளஸ் ஓப்பன் மாடல் மற்றும் ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் பேட் 2 மற்றும் ஒன்பிளஸ் பேட் 3 மாடல்கள்.

மோட்டோரோலா ரேசர், எட்ஜ், ஜி மாடல்கள் (Motorola Razr, Edge, G Models):
மோட்டோரோலா ரேசர் 2025, ரேசர்பிளஸ் 2025, ரேசர் அல்ட்ரா 2025, ரேசர்பிளஸ் 2024, ரேசர் 60, ரேசர் 60 அல்ட்ரா, ரேசர் 50, ரேசர் 50 அல்ட்ரா, மோட்டோரோலா எட்ஜ் 2025, எட்ஜ் 60, எட்ஜ் 60 ப்ரோ, எட்ஜ் 60 ஃப்யூஷன், எட்ஜ் 60 ஸ்டைலஸ், எட்ஜ் 50, எட்ஜ் 50 ப்ரோ, எட்ஜ் 50 அல்ட்ரா, எட்ஜ் 50 நியோ, எட்ஜ் 50 ஃப்யூஷன், எட்ஜ் 40 ப்ரோ, மோட்டோ ஜி86, ஜி86 பவர், ஜி85 மாடல்கள்.
ஓப்போ, ஃபைண்ட், ரெனோ மாடல்கள் (OPPO, Find, Reno Models):
ஒப்போ ஃபைண்ட் என்5, ஃபைண்ட் என்3, ஃபைண்ட் என்3 ஃபிளிப், ஃபைண்ட் என்2, ஃபைண்ட் என்2 ஃபிளிப் மாடல்கள். ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8, ஃபைண்ட் எக்ஸ்8 ப்ரோ, ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா மாடல்கள். ஓப்போ ஃபைண்ட் எஸ்7 சீரிஸ், ஃபைண்ட் எக்ஸ்6 சீரிஸ், ஒப்போ ரெனோ 14 சீரிஸ், ஒப்போ ரெனோ 13 சீரிஸ், ரெனோ 11, ரெனோ 11 ப்ரோ மாடல்கள்.

விவோ, பேட் மாடல்கள் (Vivo, Pad Models):
விவோ எக்ஸ்200, எக்ஸ்200 ப்ரோ, எக்ஸ்200 ப்ரோ மினி, எக்ஸ்200 அல்ட்ரா மற்றும் எக்ஸ்200எஸ் மாடல்கள். அதேபோல விவோ எக்ஸ்100 சீரிஸ், விவோ எக்ஸ்90 சீரிஸ் மாடல்கள். விவோ வி50 சீரிஸ், விவோ வி40 சீரிஸ், விவோ வி30 சீரிஸ், விவோ டி4 சீரிஸ், விவோ டி3 சீரிஸ் மாடல்கள், விவோ பேட் 5, பேட் 5 ப்ரோ, பேட் 3, பேட் 3 ப்ரோ மாடல்கள்.


Click it and Unblock the Notifications








