எல்ஜி வெல்வெட் 4ஜி பயனர்களுக்க ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?
அண்மையில் எல்ஜி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, வரும் ஏப்ரல் 2021 முதல் சில எல்ஜி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. முதலில் எல்ஜி வெல்வட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்பு எல்ஜி ஜி8 எக்ஸ், எல்ஜி வெல்வெட் 4ஜி போன்ற சாதனங்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட்.

இந்த புதிய அப்டேட் எல்ஜி பயனர்களுக்கு தனித்துவமான அம்சங்களை வழங்கும். LG V50 ThinQ, LG G8X, LG VELVET 4G, LG G8S, LG WING, LG K52, LG K42 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கும் வரும் ஏப்ரல் மாதம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அருமையான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்த எல்ஜி வெல்வெட் சாதனத்தின் பல்வேறு அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:5 திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சாம்பல், பச்சை,வெள்ளை உள்ளிட்ட சில நிறங்களில் வெளிவந்துள்ளது.

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போனில் 2.4ஜிகதஹெர்ட் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி 7என்எம் பிராசஸர் வசதி உள்ளது, மேலும் 5ஜிபி ஆதரவு உடன் அட்ரினோ 620ஜிபியு வசதியும் இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.
இந்த ஸ்மார்ட்போனில் 4300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி கூட இவற்றுள் அடக்கம்.
5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, என்எப்சி, புளூடூத், ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications