ஆரஞ்சு நிறத்தில், மலிவு விலையிலும் களமிறங்கும் ஐபோன்கள்.!
ஆப்பிள் நிறுவனத்தின் 2018ம் ஆண்டு வெளியீட்டுக் கூட்டம் நாளை நடக்கின்றது. இந்த புதிய வெளியீட்டு குறித்தும் ஆன்லைனில் தகவல்கள் சகிந்த வண்ணம் இருக்கின்றன. இதில் ஐபோன் எக்ஸ்எஸ், எக்ஸ்எஸ், மேக், எஸ்சி உள
ஐபோன் நிறுவனத்தின் பல்வேறு மாடல் போன்களும் இந்தியாவில் இளைஞர்களுக்கு பிடித்தமான ஒன்றாகவே உள்ளது. ஐ போனை வைத்து இருந்தாலே தனி கெத்து தான் என்று அனைவருக்கும் தோன்றும்.

அந்த போனில் உள்ள எந்த ஒரு தகவலையும் பிறரால் திருட முடியாது. அந்த அளவுக்கு ஐபோன் பாதுகாப்பானதும் கூட. மேலும் அந்த போனில் உள்ள அம்சங்களும், தனித்தன்மையாக வடிவமைக்கப்பட்ட தோற்றமும் காண்பேரை எப்போதும் கவர்கின்றதாகவே உள்ளது.
இந்நிலையில் மலிவு விலையில் பட்டைய கிளப்பும் வகையிலும் காண்போரை கவரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 9 இணையதளத்தில் தகவல்கள் கசித்துள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் கூட்டம்:
ஆப்பிள் நிறுவனத்தின் 2018ம் ஆண்டு வெளியீட்டுக் கூட்டம் நாளை நடக்கின்றது. இந்த புதிய வெளியீட்டு குறித்தும் ஆன்லைனில் தகவல்கள் சகிந்த வண்ணம் இருக்கின்றன. இதில் ஐபோன் எக்ஸ்எஸ், எக்ஸ்எஸ், மேக், எஸ்சி உள்ளிட்டவைகள் குறித்தும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலிவு விலை ஐபோன்:
6.1 இஞ்சில் எல்சிடி ஐயோன் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆன்லைனில் கசிந்துள்ள தகவலின்படி புதிய ஐபோன் மாடல் போன்கள் ஸ்பேஸ் க்ரே, ரெட், ஸ்பசை ஆரஞ்சு, கோபால்ட் ப்ளூ ஆகிய வண்ணங்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் இல்லாத ஐபோன்கள்:
முனைப்பகுதியில் வெள்ளை/ கோல்ட் நிறத்திலான மாடல் ஒன்று காணப்படுகின்றது. ஆனால் அதன் பெயர் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஐபோன் 8ஐப் போன்று ஐபோன் 9 மாடல் சிங்கிள் ரியர் கேமரா கொண்டுள்ளது.

ஆன்லைனில் உலா:
இந்த தகவல்கள் அனைத்தும் ஆன்லைனில் கசிந்து உலா வருவதால், இணையவாசிகள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஒரு புறம் குறைவான விலைக்கு வருகின்றது. தங்களுக்கு பிடித்தமான நிறங்களில் வெளிவர இருக்கின்றது என்று பொது மக்கள் பூரிப்படைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications