Home
Mobile

கவர்ச்சியான தோற்றத்துடன் புதிய டெல் ஸ்மார்ட்போன்!

By Super

கவர்ச்சியான தோற்றத்துடன் புதிய டெல் ஸ்மார்ட்போன்!
புதிய தொழில் நுட்பங்கள் நுணுக்கங்களில் வாடிக்கையாளர்களை ஸ்தம்பித்து நிற்க வைக்கிறது டெல் நிறுவனம். மீண்டும் தனது இன்னொரு புதிய தொழில் நுட்பம் கொண்ட டெல் ஸ்ட்ரீக் ப்ரோ 101-டிஎல் ஸ்மார்ட்போனை கொடுக்க இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்த மாதம் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

அனைத்து வகையிலும் சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3 ஜென்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். லினெக்ஸ் 2.6.35 கர்னல் ஆப்பரேட்டிங்

சிஸ்டத்தினையும் பெற்றுள்ளது. 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் சிம் கியூவல்காம் ஸ்கார்பியன் பிராசஸரையும் மற்றும் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம் 8260 சிப்செட்டையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.

ஸ்ட்ரீக் ப்ரோ 101-டிஎல் கியூவல்காம் அட்ரினோ 220 கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் தரும். இதன் சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால் சூப்பர் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் லெட் 4.3 இஞ்ச் மல்டி தொடுதிரை வசதியினை கொண்டுள்ளது. இதனால் சிறப்பான தகவல்களையும், புகைப்படங்களையும் தொளிவாக

பார்க்க முடியும். 540 x 960 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற இந்த ஸ்மார்ட்போனின் திரை மிக வசதியாக இருக்கும்.

இதில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பமும் உள்ளதால் இன்டர்நெட் வசதியை ஓயாமல் பெறலாம். இன்டர்நெட் வசதி மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கறது. அந்த அவசியத்தினை இந்த ஸ்மார்ட்போனின் மூலம் பூர்த்தி செய்யலாம்.

3ஜி இன்டர்நெட் வசதிக்கும் சப்போர்ட் செய்யும் இந்த ஸ்ட்ரீக் ப்ரோ 101-டிஎல் ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்யும்.

ஜிஎஸ்எம் ஹேண்ட்செட் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 140 கிராம் எடையை கொண்டுள்ளது. இதனால் எளிதாக கையாளலாம் என்பது சாத்தியமான ஒன்று தான்.

இரண்டு கேமராக்கள் சர்வ சாதரணமாக எல்லா ஸ்மார்ட்போனிலும் இருக்கிறது. அப்படி இருக்கையில் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட டெல் ஸ்மார்ட்போனில் மட்டும் இல்லாமல் இருக்குமா என்ன? இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளதால் புகைப்படத்திற்கும், வீடியோ வசதிக்கும் பஞ்சமே இல்லை என்று

சொல்லலாம்.

இதன் 8 மெகா பிக்ஸல் கேமரா 3264 x 2448 பிக்ஸல் துல்லியத்தையும், செகன்டரி கேமரா 1280 x 1024 துல்லியத்தையும் வழங்கும். இப்படி பல வகையான தொழில் நுட்பங்களை ஒருங்கிணைத்து ஸ்ட்ரீக் ப்ரோ 101-டிஎல் ஸ்மார்ட்போனின் மூலம் தர இருக்கிறது டெல் நிறுவனம்.

எல்ஐ-அயான் 1520 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சிறப்பான டாக் டைம் மற்றும் சிறப்பான ஸ்டான்-பை டைமினையும் பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விலை ஏதும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விலை பற்றிய தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X