எப்போதும், எங்கேயும் நான் ராஜா : அம்பானியின் "பலே" ஜியோபோன் திட்டம்.!

Written By:

அடுத்தக்கட்ட சந்தைபுயலுக்கு தயாராகிவிட்ட பில்லியனரான முகேஷ் அம்பானி, தனது ஜியோபோனில் - 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட மொபைல் மற்றும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகியவற்றிக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் ஒரு வழியை அதாவது - ஒரு சிறப்பான அம்சத்தை சேர்க்க முடிவெடுத்துள்ளார்.

வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகமாகுமென எதிர்பார்க்க்கப்படும் ஜியோபோனை இந்தியர்கள் அனைவரும் வாங்கவைத்து விட வேண்டுமென நினைக்கும் அம்பானி மற்றும் அவரின் ஜியோ நிறுவனத்தின் மாட்ஸர் பிளான் தான் என்னவென்று தெரியுமா.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இன்னும் 3ஜி / 4ஜி பயனர்கள் அல்ல

இன்னும் 3ஜி / 4ஜி பயனர்கள் அல்ல

ஏர்டெல் மற்றும் ஐடியாவிற்கான ஸ்மார்ட்போன் ஊடுருவல் 40% வாடிக்கையாளர்களை கடந்து விட்டது, இருப்பினும் அவற்றில் குறிப்பிடத்தகுந்த பகுதி இன்னும் பிராட்பேண்ட் (3ஜி / 4ஜி) பயனர்கள் அல்ல.

தரத்தை குறைப்பதின் மூலம்

தரத்தை குறைப்பதின் மூலம்

இந்த ஸ்மார்ட்போன் பயனர் தளத்தின் குறைந்த அளவையும், அவர்களால் கிடைக்கப்பெறும் சராசரி வருமானத்தையும் மனதில் கொண்டு - அதன் வாடிக்கையாளர்களால் கோரப்பட்ட விற்பனை விலையை பொருத்து, அம்சங்களின் எண்ணிக்கை (மற்றும் அவற்றின் தொடர்புடைய நலன்களை) அல்லது தயாரிப்புகளின் தரத்தை குறைப்பதின் மூலம் ஜியோபோனை ஒரு ஸ்மார்ட்போனாக மாற்றலாமென அம்பானி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

வாட்ஸ்ஆப்பின் லைட் வெர்ஷன்

வாட்ஸ்ஆப்பின் லைட் வெர்ஷன்

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல மெஸேஜிங் ஆப் ஆன வாட்ஸ்ஆப்பின் லைட் வெர்ஷன் பதிப்பிற்காக ஜியோபோன் நிறுவனம் வாட்ஸ்ஆப் பொறியாளர்களுடன் கலந்துரையாடி வருகிறது.

ஈடுகட்ட அம்பானி விரும்புவதோடு

ஈடுகட்ட அம்பானி விரும்புவதோடு

4ஜி போனில் இருந்து ஸ்மார்ட்போனாக ஜியோபோனை உருவகப்படுத்தும் இந்த இடைவெளியை வாட்ஸ்ஆப் லைட் பதிப்பின் மூலம் ஈடுகட்ட அம்பானி விரும்புவதோடு இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான தினசரி வாடிக்கையாளர்களாகவும், உலகின் ஒரு பில்லியனுக்கும் மேலான கருவிகளை விற்கலாம் என்றும் நம்புகிறார்.

எதிராக போட்டி

எதிராக போட்டி

ஆண்ட்ராய்டு சார்ந்து இயங்கக்கூடிய ஸ்மார்ட் அம்சங்கள் கொண்ட தொலைபேசிகளை உருவாக்க ஐடியா மற்றும் இன்டெக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜியோபோனுக்கு எதிராக போட்டியை ஏற்கனவே போட்டியை ஆரம்பித்து விட்ட நிலைப்பாட்டில், அம்பானி சரியான பாதையில் பயணிப்பதாகவே தெரிகிறது.

ஆரம்ப நிலை

ஆரம்ப நிலை

மறுபக்கம் அம்பானியின் ஜியோபோன் பற்றிய விமர்சனங்கள் மற்றும் தயாரிப்புக்கோளாறுகள் சமீபத்தில் பெருமளவு வெளியான வண்ணமிருக்க அம்பானி இந்த முடிவை எடுத்துள்ளதாகவே தெரிகிறது. கார்பரேட் டெய்லி செய்தியின்படி, இந்த விவாதங்கள் மிகவும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன என்று தெரிவிக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Mukesh Ambani may have just found the killer feature that would make JioPhone irresistible. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot