ஆதிகாலத்து iPhone 13 முதல் டாப் செல்லிங் iPhone 16 வரை.. Amazon VS Flipkart - எது Cheap ஆக விற்கிறது?
நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை காலம் வந்துவிட்டால் போதும் - அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் என்கிற 2 சின்ராசுகளையும் கையில் பிடிக்க முடியாது. சிறப்பு விற்பனைகளை அறிவித்து, ஆபர்களை அள்ளி வாரி வீசும். சரியாக ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் ஆப்பிளின் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகமான பின்னர் நடைபெறுவதால் ஐபோன்களின் மீதான ஆபர் அபாரமாக இருக்கும்!
இந்த முறையும் அப்படித்தான் இருக்க போகிறது. அமேசான் இந்தியாவின் கிரேட் பெஸ்டிவல் சேல் 2025 மற்றும் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 - ஆகிய இரண்டுமே "ஆதிகாலத்து" ஐபோன் 13 முதல் கடந்த ஆண்டு அறிமுகமான லேட்டஸ்ட் ஐபோன் 16இ மாடல் வரையிலாக.. அனைத்திலும் பெரிய அளவிலான ஆபர்களை அறிவித்துள்ளன.

அப்படியாக வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 (Amazon Great Indian Festival Sale 2025) மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) ஆகிய இரண்டிலுமே என்னென்ன ஐபோன்கள், என்ன ஆபர் விலைக்கு வாங்க கிடைக்கும் என்கிற ஒப்பீடு இதோ:
1. ஆப்பிள் ஐபோன் 13 (128 ஜிபி): பிளிப்கார்ட்டில் ரூ.44,999 க்கும், அமேசான் இந்தியாவில் ரூ.43,900 க்கும் வாங்க கிடைக்கும்.
2. ஆப்பிள் ஐபோன் 14: பிளிப்கார்ட்டில் (128 ஜிபி) ரூ.52,990 க்கும் அமேசான் இந்தியாவில் (256 ஜிபி) ரூ.61,900 க்கும் வாங்க கிடைக்கும்.
3. ஆப்பிள் ஐபோன் 15 (128 ஜிபி): பிளிப்கார்ட்டில் ரூ.64,900 க்கும், அமேசான் இந்தியாவில் ரூ.59,900 க்கும் வாங்க கிடைக்கும்.
4. ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் (128 ஜிபி): பிளிப்கார்ட்டில் ரூ.69,999 க்கும், | அமேசான் இந்தியாவில் ரூ.69,499 க்கும் வாங்க கிடைக்கும்.
5. ஆப்பிள் ஐபோன் 16 (128 ஜிபி): பிளிப்கார்ட்டில் ரூ.51,999 க்கும், அமேசான் இந்தியாவில் ரூ.69,499 க்கும் வாங்க கிடைக்கும்
6. ஆப்பிள் ஐபோன் 16இ (128 ஜிபி): பிளிப்கார்ட்டில் ரூ.54,900 க்கும், அமேசான் இந்தியாவில் ரூ.51,499 க்கும் வாங்க கிடைக்கும்.
புதிய ஐபோன் 17 மடலின் விலை விவரங்கள்: ஐபோன் 17 மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.82,900 க்கும், ஹைஎண்ட் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,02,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 17-க்கான ப்ரீ-ஆர்டர் ஆனது செப்டம்பர் 12 ஆம் தேதி முதலே தொடங்கி விட்டது, விற்பனை செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
ஐபோன் ஏர் மாடலின் விலை விவரங்கள்: ஐபோன் ஏர் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,19,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,59,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 17 ப்ரோ மாடலின் விலை விவரங்கள்: ஐபோன் 17 ப்ரோ மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,34,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,54,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,74,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை விவரங்கள்: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,49,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,69,900 க்கும், 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,89,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 2டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.2,29,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








