Amazon Vs Flipkart ஆல் நமக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.. iPhone 16, iPhone 16 Pro மீது இவ்ளோ பெரிய டிஸ்கவுண்ட்-ஆ!
இந்தியாவின் 2 பிரபலமான இ-காமர்ஸ் வலைத்தளங்கள் ஆன அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டுமே தத்தம் வலைத்தளங்களில் 2025 சுதந்திர தின விற்பனையை நடத்தி வருகின்றன: அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் 2025 மற்றும் பிளிப்கார்ட் ப்ரீடம் சேல் 2025.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டுமே - ஆப்பிளின் ஐபோன் 17 சீரீஸ் (Apple iPhone 17 Series) அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், ஐபோன் 16 (iPhone 16) மற்றும் ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மீது பெரிய அளவிலான டிஸ்கவுண்ட்களை அறிவித்துள்ளன.

அமேசான் இந்தியா, பிளிப்கார்ட்டில் ஐபோன் 16 மீதான சலுகைகள் (Deal on iPhone 16 on Flipkart, Amazon): அமேசான் இந்தியாவில், ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இப்போது ரூ.72,400 க்கு கிடைக்கிறது. இது அதன் அசல் விலையான ரூ.79,900 இலிருந்து குறிப்பிடத்தக்க குறைப்பு ஆகும்.
இதற்கிடையில், பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது இன்னும் பெரிய தள்ளுபடியை வழங்குகிறது, அதே ஐபோன் 16 மாடலின் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.69,999 க்கு விற்பனை செய்கிறது. இது 12 சதவீத தள்ளுபடி ஆகும். கூடுதலாக வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைபயன்படுத்தினால் இன்னும் விலையை குறைக்க முடியும்.
அமேசான் இந்தியா, பிளிப்கார்ட்டில் ஐபோன் 16 ப்ரோ மீதான சலுகைகள் (Deal on iPhone 16 Pro on Flipkart, Amazon): தற்போது ஐபோன் 16 ப்ரோ மாடலை அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக ரூ.1,11,900 க்கு வாங்கலாம், இது அதன் ஆரம்ப விலை ரூ.1,19,900 இலிருந்து குறைவாகும்.
இருப்பினும், பிளிப்கார்ட்டில் ஐபோன் 16 ப்ரோ மாடல் ரூ.1,07,900 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது அமேசானை விட பிளிப்கார்ட் அதிக தள்ளுபடியை வழங்குகிறது. இது 10 சதவீத தள்ளுபடி ஆகும். கூடுதலாக வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைபயன்படுத்தினால் இன்னும் விலையை குறைக்க முடியும்.
ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ்: ஆப்பிள் அதன் புதிய ஐபோன் 17 சீரீஸ் மாடல்களை செப்டம்பர் 2025 இல் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான வெளியீட்டு தேதி விரைவில்அறிவிக்கப்படலாம். இந்த சீரிஸின் கீழ், ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 17 சீரீஸ் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஜெஃப்பெரிஸ் ஆய்வாளர் ஆன எடிசன் லீ (Jefferies analyst Edison Lee) வழியாகலீக் ஆன தகவல்களின்படி ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் சீரீஸிற்கான விலை உயர்வுகளை பரிசீலித்து வருகிறது. அதாவது ஐபோன் 17 சீரிஸ் ஆனது ஐபோன் 16 மாடல்களை விட அதிக விலைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று பரிந்துரைக்கிறது.
ஜெஃப்பெரிஸ் ஆய்வாளர் ஆன எடிசன் லீயின் கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் உடன் ஒப்பிடும் போது ஐபோன் 17 சீரீஸ்-க்கான விலையை சுமார் $50 (தோராயமாக ரூ.4,000) உயர்த்த வாய்ப்புள்ளது. ஆனால் வெண்ணிலா வேரியண்ட் ஆன ஐபோன் 17 மாடலின் விலைஆனது பழைய ஐபோன் 16 மாடலின் வெளியீட்டு விலையுடன் பொருந்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கணிப்பு துல்லியமாக இருந்தால், ஐபோன் 17 ப்ரோ மாடலின் விலை $1,049 (தோராயமாக ரூ.91,000) க்கு தொடங்கலாம், இது ஐபோன் 16 ப்ரோ மாடலின் வெளியீட்டு விலையான $999 (தோராயமாக ரூ.87,000) விட அதிகமாகும். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் $1,199 (தோராயமாக ரூ.1,00,700) க்கு அறிமுகமானது. இதனுடன் ஒப்பிடும்போது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை $1,249 (தோராயமாக ரூ.1,09,000) ஆக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








