Home
Mobile

குறைந்த விலையில் விவோ ஸ்மார்ட்போன்களை வாங்க சூப்பர் வாய்ப்பு.!

இந்த விற்பனை திருவிழாவின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள விவோ ஸ்மார்ட்போன்களை, அதன் சலுகைகளையும் மற்றும் அதன் அம்சங்களையும் விரிவாக காண்போம்.

By Muthuraj

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா அதன் விவோ கார்னிவல் விற்பனையை அறிவித்துள்ளது. டிசம்பர் 20 முதல் டிசம்பர் 22 வரை அதன் வலைத்தளத்தில் நிகழும் இந்த விற்பனையில் பல்வேறு விவோ ஸ்மார்ட்போன்கள் மீது சுவாரஸ்யமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

குறைந்த விலையில் விவோ ஸ்மார்ட்போன்களை வாங்க சூப்பர் வாய்ப்பு.!

புக்மைஷோ வழியாக ரூ.3,000 வரை கூடுதல் எக்ஸ்சேன்ஜ் சலுகை, இலவசமான திரைப்பட டிக்கெட்டுகள், அமேசான்ப இ-வேலட் வழியாக 5 சதவிகித கேஷ்பேக் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் போன்ற பல சலுகைகள் இந்த விற்பனையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சலுகைகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள விவோ ஸ்மார்ட்போன்களை அதன் அம்சங்களையும் விரிவாக காண்போம்.

விவோ வி7 ப்ளஸ்

விவோ வி7 ப்ளஸ்

இந்த விற்பனை திருவிழாவானது விவோவின் தலைமை செல்பீ-மைய ஸ்மார்ட்போனுடன் தொடங்குகிறது. வி7 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் 64ஜிபி மாறுபாடானது ரூ.21,990/-க்கு கிடைக்கும். ரூ.2000/- வரை கூடுதல் எக்ஸ்சேன்ஜ் கிடைக்கும் என்பதால் இதை ரூ.17,100/-க்கும் வாங்க முடியும். இது தவிர்த்து அமேசான் பே மற்றும் புக்மைஷோ வழியாக வாங்கும் பயனர்களுக்கு முறையே 5 சதவிகித கேஷ்பேக் மற்றும் ஜோடி திரைப்பட டிக்கெட்டுகள் கிடைக்கும்.

விவோ வி7 ப்ளஸ் அம்சங்களை

விவோ வி7 ப்ளஸ் அம்சங்களை

இக்கருவியின் முக்கிய சிறப்பம்சமாக அதன் 24 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா, 16 மெகாபிக்சல் பின்புற கேமரா திகழ்கிறது. இது 6.2 அங்குல குவாட்-எச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே (2960 x 1440 பிக்சல்கள் மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம்), க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 450 சிப்செட், ஆக்டா கோர் (1.8 ஜிகாஹெர்ட்ஸ்), 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு ஆகியவைகளை கொண்டுள்ளது.

விவோ வி7

விவோ வி7

நிறுவனத்திடமிருந்து புதிதாகத் தொடங்கப்பட்ட விவோ வி7 ஆனது இப்போது ரூ.18,990/-க்கு அமேசானில் வாங்க கிடைக்கும். இந்த தொலைபேசிக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்றாலும் கூட, ஒருவரால் ரூ.2000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையை பெறமுடியும். இக்கருவியுடன் ஒரு முறை இலவச திரை மாற்று வாய்ப்பு மற்றும் வோடபோன் வழங்கும் 100ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவையும் பெற முடியும்.

விவோ வி7 அம்சங்கள்

விவோ வி7 அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் ஒரு 16 மெகாபிக்சல் முதன்மை மற்றும் 24 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. உடன் 1440x720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.7 அங்குல எச்டிஐபிஎஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் நினைவகம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

விவோ வி5 பிளஸ்

விவோ வி5 பிளஸ்

விவோ வி5 பிளஸ் இப்பொழுது ரூ.7,990/- அளவிலான சலுகைகளை பெற்று ரூ.19,990/-க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.27,980/- ஆகும். உடன் ரூ.2000/- வரை கூடுதல் எக்ஸ்சேன்ஜ் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ வாய்ப்பும் கிடைக்கும். இக்கருவியின் பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில், 4 ஜிபி ரேம், 64 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 3055 எம்ஏஎச் பேட்டரி, ஒரு 16 மெகாபிக்சல் பின்புற மற்றும் 20 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது.

விவோ வி5எஸ்

விவோ வி5எஸ்

ரூ.18,990/- என்கிற அசல் விலையை கொண்ட விவோ வி5எஸ் ஆனது ரூ.3,000/- என்கிற எக்ஸ்சேன்ஜ் சலுகைக்கு பிறகு ரூ.15,990/-க்கு கிடைக்கிறது. புக்மைஷோ மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ வாய்ப்புகளை கொண்டுள்ள இதன் அம்சங்களை பொருத்தமட்டில், 20 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 3000 எம்ஏஎச் பேட்டரி, மீடியா டெக் எம்டி6750 ஆக்டா-கோர் 64 பிட் செயலி ஆகியவைகளை கொண்டுள்ளது.

விவோ ய்வை69

விவோ ய்வை69

விவோ ய்வை69 ஆனது ரூ.14,990/-க்கு வாங்க கிடக்கிறது. அமேசான் பே வழியாக 5 சதவிகித கேஷ் பேக் சலுகை மற்றும் புக்மைஷோ வழியாக இலவச சினிமா டிக்கெட்டுகளையும் வழங்கும் இந்த சாதனத்தின் பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில் - 16 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 1.5ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் எம்டி6750 ஆக்டா-கோர் செயலி, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் நினைவகம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

விவோ ய்வை66

விவோ ய்வை66

விவோ ய்வை69 ஆனது ரூ.112,990/-க்கு வாங்க கிடக்கிறது. அமேசான் பே வழியாக 5 சதவிகித கேஷ் பேக் சலுகை மற்றும் புக்மைஷோ வழியாக இலவச சினிமா டிக்கெட்டுகள் , நோ காஸ்ட் இஎம்ஐ ஆகிய வாய்ப்புகளை வழங்கும் இந்த சாதனத்தின் பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில் - 16 மெகாபிக்சல் மூன்லைட் செல்பீ கேமரா, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. ரூ.3000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ.11,691/-க்கும் இக்கருவியை வாங்க முடியும்.

விவோ ய்வை53

விவோ ய்வை53

ரூ.1,000/- என்கிற தள்ளுபடியை பெற்று இப்போது ரூ.8,990/-க்கு கிடைக்கும் விவோ ய்வை53 ஆனது எக்ஸ்சேன்ஜ் சலுகைக்கு பின்னர் ரூ.8,091/-க்கு கிடைக்கும். அமேசான் பே வழியாக 5 சதவிகித கேஷ் பேக் சலுகை மற்றும் புக்மைஷோ வழியாக இலவச சினிமா டிக்கெட்டுகளையும் வழங்கும் இந்த சாதனத்தின் பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி மற்றும் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரோம் ஆகும்.

விவோ ய்வை55எஸ்

விவோ ய்வை55எஸ்

13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ள இக்கருவி ரூ.13,490/- என்கிற விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது ரூ.11,990/-க்கு கிடைக்கிறது. எக்ஸ்சேன்ஜ் சலுகை வழியாக ரூ.10,791/-க்கு வாங்க முடியும். 3 ஜிபி ரேம், மற்றும் 16 ஜிபி உள் நினைவகம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அமேசான் பே வழியாக 5 சதவிகித கேஷ் பேக் சலுகை மற்றும் புக்மைஷோ வழியாக இலவச சினிமா டிக்கெட்டுகளையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Vivo Carnival: Top deals on Vivo V7+, Vivo V7, Vivo V5s and more. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X