இதுக்கு மேல குறைக்க முடியாது.. ரூ.9,998 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. IP64 ரேட்டிங்..எந்த மாடல்?
அமேசான் தளத்தில் இன்று நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஐக்யூ இசட்10 லைட் 5ஜி (iQOO Z10 Lite 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.9,998 விலையில் வாங்கிவிட முடியும்.

ஐக்யூ இசட்10 லைட் 5ஜி அம்சங்கள் (iQOO Z10 Lite 5G Specifications): 6.74 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்கள், டார்க் மோட் (Dark Mode), 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300(6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் மாலி ஜி57 ஜிபியு(Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதேபோல் 50 எம்பி சோனி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

அதுவும் 6000mAh பேட்டரி உடன் ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த ஐக்யூ போன். குறிப்பாக 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), டாப் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Top Ported Speakers) வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








