Home
Mobile

மீண்டும் ஒன்பிளஸ், சாம்சங், ரெட்மி போன்களுக்கு தள்ளுபடி வழங்கி தெறிக்கவிட்ட Amazon.!

அமேசான் தளத்தில் தீபாவளி விற்பனை முடிவடைந்ததைத் தொடர்ந்து, Smartphone Upgrade Days sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான ஒன்பிளஸ், சியோமி, ரியல்மி, சாம்சங் போன்ற பல நிறுவனங்களின் போன்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி

தள்ளுபடி

அதேபோல் இந்த சிறப்புச் சலுகை வரும் அக்டோபர் 28-ம் தேதி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது அமேசான் தளத்தில் இப்போது வழங்கப்பட்ட சலுகைகள் என்னவென்றால், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி போன்களை வாங்கும்போது கிடைக்கும் சலுகைகள், இஎம்ஐ உடன் 10 சதவீதம் உடன் தள்ளுபடி உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1000 கேஷ்பேக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி ரியர் கேமரா, 6.5-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  iQOO Z6 5G ஸ்மார்ட்போன்

iQOO Z6 5G ஸ்மார்ட்போன்

iQOO Z6 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. அதேபோல் iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களையும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கினால் ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
குறிப்பாக இந்த இரண்டு போன்களும் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன.

 ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி

அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி போனுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.18,999-விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

64எம்பி மெயின் கேமரா, 6.59-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி பிரைம்

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி பிரைம்

அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி பிரைம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும். 50எம்பி மெயின் கேமரா, 6.7-இன்ச் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச்
பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின விலை ரூ.14,499-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1250 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த ரெட்மி போன்
தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக 108எம்பி
ரியர் கேமரா, 6.67-இன்ச் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

   ரியல்மி

ரியல்மி

அமேசான் தளத்தில் ரியல்மி narzo 50i ஸ்மார்ட்போனுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.5749 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடி கிடைக்கும்


அதேபோல் ரியல்மி narzo 50 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடி கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Smartphone Upgrade Days: Offers on Samsung, OnePlus, Redmi phones: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X