ஜிஎஸ்டி அமல் பீதியில் அமேசான் : ஐபோன்கள் டூ ஒன்ப்ளஸ் வரை அதிரடி சலுகைகள்.!

|

அமேசான் வலைதளம் அதன் ஸ்மார்ட்போன் சேல் சலுகை விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையானது ஜூன் 19 முதல் ஜூன் 21 வரை நடைபெறுகிறது, மேலும் இந்த விற்பனை காலப்பகுதியில் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமின்றி மடிக்கணினிகளில் மற்றும் ஹெட்போன்களுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது.

ஜிஎஸ்டி அமல் பீதியில் அமேசான் : ஐபோன்கள் டூ ஒன்ப்ளஸ் வரை அதிரடி சலுகை!

ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும். பெரும்பாலான இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமுல் படுத்துவதற்கு முன்னரே இதுபோன்ற விற்பனையை நடத்துவார்கள் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படியாக இந்த அமேசான் ஸ்மார்ட்போன் விற்பனையில் நமக்கு காத்திருக்கும் ஸ்மார்ட்போன்கள் என்ன.?? அவைகளுக்கான தள்ளுபடிகள் என்னென்ன.?? அம்சங்கள் என்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள்

ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள்

அமேசான் ஸ்மார்ட்போன் விற்பனையின் ஒரு பகுதியாக ஆப்பிள் ஐபோன் 6, ஐபோன் எஸ்இ, சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ, மோட்டோ ஜி 4 தொடர், பழைய ஒன்ப்ளஸ் 3 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6 கருவியின் 32 ஜிபி சேமிப்பு கொண்ட ஸ்பேஸ் சாம்பல் நிற பதிப்பு ரூ.24,999/-க்கு கிடைக்கிறது. ஐபோன் 6 கருவியின் ஐஓஎஸ் 11 அப்டேட், 8எம்பி பின்புற கேமரா மற்றும் 1.2எம்பி கேமராவுடன் 4.7 இன்ச் ரெடினா டிஸ்ப்ளே, 32 ஜிபி மெமரி ஆகிய அம்சங்களை இக்கருவி கொண்டுள்ளது.

ஐபோன் எஸ்இ

ஐபோன் எஸ்இ

ஆப்பிள் ஐபோன் எஸ்இ கருவியின் ஸ்பேஸ் சாம்பல் பதிப்பு அமேசான் இந்தியாவில் ரூ.19,999/- என்ற விலைக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 12எம்பி பின்புற கேமரா மற்றும் 1.2எம்பி முன் கேமரா உடனான சிறிய 4 அங்குல ரெட்டினா காட்சி, 16 ஜிபி மெமரி .ஆகிய அம்சங்களை இக்கருவி கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ

சாம்சங் ஆன்5 ப்ரோ கருவியின் தங்க நிற பதிப்பு அமேசான் இந்தியாவில் ரூ.7,190/-க்கு கிடைக்கிறது. 5 அங்குல எச்டி தீர்மானம் காட்சி, எக்ஸிநோஸ் க்வாட்கோர் செயலி, 2 ஜிபி ரேம் + 16ஜிபிசேமிப்பு, 8எம்பி பின்புற கேமரா மற்றும் 5எம்பி முன் கேமரா கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ

அமேசான் இந்தியாவில் சாம்சங் ஆன் 7 ப்ரோ (தங்கம்) ரூ.8,690/-க்கு கிடைக்கிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் க்வாட்-கோர் ப்ராசசர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி சேமிப்பு ஆகியவற்றுடன் பெரிய 5.5 இன்ச் எச்ட டிஸ்ப்ளே கொண்டுள்ளது.மேலும் 13எம்பி பின்புற கேமரா மற்றும் 5எம்பி முன் கேமரா உடனான ஒரு நீக்கக்கூடிய லி-அயன் 3000 எம்ஏஎச் பேட்டரியும் கொண்டுள்ளது.

கேலக்ஸி சி7 புரோ

கேலக்ஸி சி7 புரோ

6எம்பி செல்பீ மற்றும் 16எம்பி பின்புற கேமராக்கள், ஒரு முழு எச்டி சூப்பர் அமோஎல்இடி காட்சி, 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ ரூ.25,990/-க்கு கிடக்கிறது. இதன் அசல் விலை ரூ. 27,990/- என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி 4

மோட்டோ ஜி 4

மோட்டோ ஜி 4 ஸ்மார்ட்போன் ரூ.9,999/-க்கு கிடக்கிறது. 5.5 அங்குல முழு எச்டி தீர்மானம் காட்சி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 617 செயலி, 2 ஜிபி ரேம் மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி, பின்புறம் இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் 5எம்பி முன் பக்க கேமரா கொண்டுள்ளது.

மோட்டோ ஜி 4 பிளஸ்

மோட்டோ ஜி 4 பிளஸ்

மோட்டோ ஜி 4 பிளஸ் (4-வது ஜென் ஸ்மார்ட்போன்) ரூ.10,499/-க்கு கிடைக்கிறது. 16 ஜிபி சேமிப்பு, 16 எம்பி பின்புற கேமராவும், 5.5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே (1080பி) கோரிங் கொரில்லா கிளாஸ் 3, 3000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 2 ஜிபி ரேம் உடனான க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 617 செயலி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

ஒன்ப்ளஸ் 3

ஒன்ப்ளஸ் 3

ரூ. 26,999 விலை நிர்ணயம் பெற்றுள்ள இக்கருவியின் அசல் விலை ரூ. 27,999/- ஆகும். க்வால்காம் ஸ்னாப்டிராகன் 820 செயலி, 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 16எம்பி பின்புற கேமரா, அண்ட்ராய்டு ஓ மேம்படுத்தல் ஆகிய அம்சங்களை இயக்கருவி கொண்டுள்ளது.

லெனோவா இசெட்2 பிளஸ்

லெனோவா இசெட்2 பிளஸ்

32 ஜிபி சேமிப்பு கொண்ட லெனோவா இசெட்2 பிளஸ் ரூ.9,999/- என்ற விலைக்கு கிடைக்கும். ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர், 5 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே, கண்ணாடி மற்றும் மெட்டல் டிசைன், 3 ஜிபி ரேம் மற்றும் 13 எம்பி ரியர் கேமரா ஆகிய அம்சங்களை இக்கருவி கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Smartphone sale Offers for Apple, Samsung, Oneplus, Lenovo, Motorola Smartphones. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X