அமேசான் சாம்சங் கார்னிவல் : என்னென்ன சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் எக்சேன்ஞ் ஆபர்கள்.?

|

சாம்சங் கார்னிவல் என்ற அதிரடி சலுகையில் பகுதியாக, அமேசான் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் பல அற்புதமான ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமின்றி பெரிய வீட்டு உபகரணங்கள் மற்றும் எல்இடி தொலைக்காட்சிகளுக்கும் சாம்சங் கார்னிவல் சலுகையின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த அதிரடி தள்ளுபடி நேற்று (ஜூன் 6) தொடங்கி ஜூன் 8 வரை அமேசான்.காம் மூலம் இயக்கப்படும். இந்த மூன்று நாள் விற்பனையின் கீழ், வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ மீது 4,000 ரூபாய்க்கு அதிகமான தள்ளுபடிகளை பயன்படுத்தலாம். மறுபக்கம் ஸ்பிலிட் ஏசி மற்றும் முழு எச்டி எல்இடி டி.விகளுக்கு 20% வரை தள்ளுபடி பெறலாம்.

ரூ.5,000/- மதிப்பிலான கோஐபிபோ ஆபர்

ரூ.5,000/- மதிப்பிலான கோஐபிபோ ஆபர்

உடன் இந்த தள்ளுபடி ஆனது கூடுதலாக கோஐபிபோ (GoIbibo) என்றவொரு ஆபரையும் கொண்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 5,000 ரூபாய் மதிப்பிலான சலுகையை விமானங்கள் மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். இது தவிர்த்து இந்த அமேசான் சலுகையில் கிடைக்கும் சாம்சங் நிறுவனத்தின் சாதனங்கள் என்னென்ன.??

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ மீது ரூ.750/- விலைகுறைப்பு நிகழ்த்தப்பட்டு இப்போது ரூ.8,740/-க்கு ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், பழைய ஸ்மார்ட்போன் ஒன்றை நீங்கள் மாற்றினால் ரூ.6,712/-க்கு வாங்கலாம். கோஐபிபோ சலுகை கேலக்ஸி ஆன்7 ப்ரோ கருவிக்கு பொருந்தும்.

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ இரட்டை சிம் மற்றும் எச்டி காட்சி கொண்ட மலிவு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இக்கருவிக்கும் ரூ.750/- விலைகுறைக்கப்ட்டு ரூபாய் 7,990/-க்கு கிடைக்கிறது. மறுகையில் நீங்கள் கேலக்ஸி ஆன் 7 ப்ரோவிற்கான பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்தினால் இக்கருவியின் மீது ரூ.5,750/- வரை தள்ளுபடி பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி ஆன்8

சாம்சங் கேலக்ஸி ஆன்8

கேலக்ஸி ஆன்7 ப்ரோ மற்றும் ஆன்5 ப்ரோ போன்ற கேலக்ஸி ஆன்8 கருவிக்கும் ரூ.750/- தள்ளுபடி கிடைக்கிறது. ஆக இதனை ரூ.12,740/-க்கு வாங்கலாம். கூடுதலாக, ஒரு பழைய ஸ்மார்ட்போன் எக்சேன்ஞ் செய்தால் ரூ.9,999/- வரை தள்ளுபடி பெறலாம். உடன் மற்ற நன்மைகளுடன் கோஐபிபோ சலுகையும் இதனுள் அடங்கும்.

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம்

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம்

சாம்சங் கார்னிவலின் கீழ், அமேசான் தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் தயாரிப்புகளுக்கு நோ காஸ்ட் இ.எம்.ஐ சலுகையை வழங்குகிறது. இதில் கேலக்ஸி ஜே7 ப்ரைம் அடங்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,900/- ஆகும். நீங்கள் இதை பரிமாற்றம் மூலம் வாங்கினால், நீங்கள் விலையில் தள்ளுபடியும் பெறலாம்.இதற்கு எந்தவிதமான இஎம்ஐயும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து கிரெடிட் கார்டு இஎம்ஐ மூலம் தயாரிப்பு வாங்கப்பட்டால் அமேசான் நிறுவனம் வட்டிகால் இருக்காது. இதன் கீழ் கொள்முதல் செய்வதற்கு முன் விதிமுறைகளை படிக்க வேண்டும் என்று பாரின் துரைக்கிறோம்.

சாம்சங் கேலக்ஸி சி9

சாம்சங் கேலக்ஸி சி9

நோ காஸ்ட் இஎம்ஐசலுகையில் சாம்சங் கேலக்ஸி ஜே2 ப்ரோ கருவிக்கு எக்சேன்ஞ் நிகழ்த்த ரூ.7,700/- தள்ளுபடியம், சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம் கருவிக்கு ரூ.11,062/- தள்ளுபடியும் மற்றும் சாம்சங் கேலக்ஸி சி9 கருவிக்கு ரூ.13,070/- தள்ளுபடியும் கிடைக்கும்.

டைரக்ட்-கூல் சிங்கிள்-டோர்

டைரக்ட்-கூல் சிங்கிள்-டோர்

சாம்சங் டைரக்ட்-கூல் சிங்கிள்-டோர் குளிர்பதன பெட்டிகளுக்கு 22 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கின்றன, அதே நேரத்தில் 3 ஸ்டார் மதிப்பீட்டிலான ப்ரீஸர் இல்லாத டபுள் டோர் குளிர்சாதனிக்ளுக்கு 20 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கின்றது. சாம்சங் டைரக்ட்-கூல் டிஜிட்டல் இன்வெர்டர் சிங்கிள்-டோர் குளிர்சாதன பெட்டிகளுக்கு 15 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

சாம்சங் ஸ்பிட் ஏசி (1.5 டன்)

சாம்சங் ஸ்பிட் ஏசி (1.5 டன்)

கோடைக்கால வெப்பத்தை எதிர்த்துப் போராட உங்களுக்கு உதவுவதற்காக இந்த அமேசான் திருவிழாவில் 5 ஸ்டார் மதிப்பீட்டை கொண்ட சாம்சங் ஸ்பிட் ஏசி (1.5 டன்) வாங்கினால் இலவச நிறுவல் உடன் 20% தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் ஒரு 3 நட்சத்திர மதிப்பீட்டை வாங்கினால், உங்களுக்கு 18 சதவிகித தள்ளுபடி கிடைக்கும். சாம்சங் இன்வெர்ட்டர் ஸ்பிலிட் ஏசிகளுக்கு 10 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

வாஷிங் மெஷின், மைக்ரோவேவ்

வாஷிங் மெஷின், மைக்ரோவேவ்

ஒரு முழுமையான ஆட்டோமேட்டிக் சாம்சங் 6.2 கிலோ டாப் லோட் வாஷிங் மெஷினுக்கு 15 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கும், அதே நேரத்தில் 23 லிட்டர் சாம்சங் மைக்ரோவேவ் ஓவெனுக்கு 14 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

எல்இடி தொலைக்காட்சிகள்

எல்இடி தொலைக்காட்சிகள்

எல்இடி தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை, 24 அங்குல எச்டி டிவி எல்இடி ரெடி டிவிக்கு 25 சதவீதம் தொடங்கி தள்ளுபடிகளையும், 40 அங்குல அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி-களுக்கு 30 சதவீதம் தொடங்கி தள்ளுபடிகளையும் பெறலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Samsung Carnival: Discounts on Galaxy C7 Pro, On7 Pro, On5 Pro smartphones, no cost EMI offers, and more. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X