தட்டி தூக்குறாங்க.. 50எம்பி கேமரா, 6.43-இன்ச் டிஸ்பிளே.. கம்மி விலையில் Nokia 5ஜி போன்.! அசத்தும் ஆஃபர்..
அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல்(Amazon Great Freedom Festival Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமேசான் தளத்தில் பல்வேறு சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவி, டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட பல சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் நோக்கியா 5ஜி போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது அமேசான் தளத்தில் நோக்கியா எக்ஸ்30 5ஜி (Nokia X30 5G) போனுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் முன்பு ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்பட்டது ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடியின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.36,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த நோக்கியா ஸ்மார்ட்போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.
குறிப்பாக நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1080×2400 பிக்சல்ஸ், 700 நிட்ஸ் ப்ரைட்னஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,கார்னிங் கொரில்லா க்ளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது நோக்கியா எக்ஸ்30 5ஜி . பெரிய டிஸ்பிளே மற்றும் ஃபுல் எச்டி பிளஸ் ஆதரவு இருப்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டு இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போன். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த இதில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தி உள்ளது அந்நிறுவனம்.
50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது நோக்கியா எக்ஸ்30 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் போன்ற பல சிறப்பான வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
cloud ப்ளூ மற்றும் ஐஸ் ஒயிட் நிறங்களில் இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போன். அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் போன்களை விட இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போனை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








