சூறாவளி ஆஃபர்.. 5000mAh பேட்டரி.. 6.5-இன்ச் டிஸ்பிளே.. மலிவு விலையில் நோக்கியா போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கம்மி விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த சிறப்பு விற்பனையைப் பயன்படுத்துவது நல்லது.
அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் அட்டகாசமான நோக்கியா போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது நோக்கியா சி22 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் கடந்த மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பாக இந்த நோக்கியா சி22 போனுக்கு தற்போது 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 4ஜிபி ரேம் (2ஜிபி ரேம் + 2ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா சி22 முன்பு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த போனை ரூ.7,499 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.750 வரை தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது . மேலும் 720×1600 பிக்சல்ஸ், கடினமான 2.5D டிஸ்ப்ளே கிளாஸ் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
நோக்கியா சி22 ஸ்மார்ட்போன் ஸ்பிளாஸ் மற்றும் தூசி பாதுகாப்பு ஆதரவுக்கு என ஐபி52 சான்றிதழ் பெற்றிருக்கிறது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா சி22 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன்.
குறிப்பாக யுனிசாக் SC9863A ஆக்டோ-கோர் ப்ராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனில் ஐஎம்ஜி8322 ஜிபியு எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) இயங்குதளத்தைக் கொண்டு இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த நோக்கியா ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி, ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலிகார்பனேட் யூனிபாடி மற்றும் திடமான மெட்டல் சேஸ் உடன் இந்த நோக்கியா சி22 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் சர்கோல், பர்ப்பிள், சாண்ட் ஆகிய நிறங்களில் இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








