அதிரவிடும் அமேசான்.. ரூ.12000 விலை குறைப்பு.. OnePlus போனை வாங்க சரியான நேரம் இதுதான்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 (Amazon Great Indian Festival Sale) எனும் சிறப்பு விற்பனை ஆனது வரும் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் போன்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 13 (OnePlus 13) போனை ரூ.12000 தள்ளுபடியில் வாங்கலாம்.
அதாவது தற்போது ரூ.69,999 விலையில் விற்பனை செய்யப்படும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் சிறப்பு விற்பனையின் போது ரூ.57,999 விலையில் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஒன்பிளஸ் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 13 அம்சங்கள் (OnePlus 13 specifications): 4.32ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் உடன் ஒன்பிளஸ் 13 போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு ஆதரவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த கேமரா செட்டப் ஆனது 4கே (60எஃப்பிஎஸ் வரை) மற்றும் 8கே வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும்.
இந்த போனின் முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்ஃ2.4 அபெர்க்ஷர் உடன் வருகிறது. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும்.
6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ AMOLED டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்,1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6000mAh பேட்டரியை கொண்டுள்ளது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. ஆகவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன். மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 + ஐபி69 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4-மைக்ரோஃபோன்கள், யூஎஸ்பி டைப்-சி போர்ட், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட அம்சங்களும் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளன. இதுதவிர பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








