Amazon Sale 2025.. சோனி கேமரா.. 6400mAh பேட்டரி.. ஆஃபரில் iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் (Amazon) தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஐக்யூ நியோ 10ஆர் 5ஜி (iQOO Neo 10R 5G) போனுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான ஸ்னாப்டிராகன் சிப்செட், 6400எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி சோனி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ 10ஆர் 5ஜி போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அமேசான் தளத்தில் இந்த போனுக்கு ரூ.2000 கூப்பன் சலுகையும் கிடைக்கிறது. எனவே இந்த போனை ரூ.22998 விலையில் வாங்கிவிட முடியும்.

ஐக்யூ நியோ 10ஆர் 5ஜி அம்சங்கள் (iQOO Neo 10R 5G Specifications): 6.78 இன்ச் பிளாட் அமோலெட் (Flat AMOLED) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800 × 1260 பிக்சல்கள், 4500 பீக் பிரைட்னஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm)சிப்செட் உடன் ஐக்யூ நியோ 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த போனில் உள்ளது.
ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த ஐக்யூ நியோ 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.
50 எம்பி மெயின் Sony IMX882 கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் செட்டப் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் 4K வீடியோ பதிவு செய்யும் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ஐக்யூ நியோ 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), 6K விசி கூலிங் சேம்பர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6400mAh பேட்டரி உடன் இந்த ஐக்யூ நியோ 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 55Wபிடி சார்ஜிங் மற்றும் 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.


Click it and Unblock the Notifications








