Home
Mobile

Amazon ஆட்டம் ஆரம்பம்.. ரூ.30000 போன் ரூ.20000.. ரூ.15000 போன் ரூ.10000.. ஆர்டர் அள்ளுமே!

தம்பி பிளிப்கார்ட்.. கொஞ்சம் ஓரம்போ.. என்று கூறும்படியாக அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளமானது, அதன் 2025 பண்டிகை கால சிறப்பு விற்பனையின் கீழ் கிடைக்கும் ஆபர்களை அறிவிக்க தொடங்கி உள்ளது. நினைவூட்டும் வண்ணம் - அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 (Amazon Great Indian Festival Sale) அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள இந்த சிறப்பு விற்பனையின் போது வழக்கம் போல 2 விஷயங்கள் நிச்சயம் நடக்கும்: ஒன்று - வழக்கம் போல அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கு 1 நாளுக்கு முன்பாகவே ஆபர்களை அணுகுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இரண்டு - வழக்கம் போல பல வகையான ஸ்மார்ட்போன்கள் மீது பலே டிஸ்கவுண்ட் கிடைக்கும். போக்கோ, ஷாவ்மீ, ரியல்மி மற்றும் ஒன்பிளஸ் போன்ற பிராண்டுகள் உட்பட!

Amazon: ரூ.15000 போன் ரூ.10000 க்கு.. ஆர்டர் அள்ளுமே!

நேரடி விலை குறைப்புகளை தவிர்த்து, அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 இல் ஷாப்பிங் செய்பவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளை பயன்படுத்தி உடனடி தள்ளுபடிகளையும் பெறலாம், இதன் மூலம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதற்கான ஒட்டுமொத்த செலவை மேலும் குறைக்க முடியும். சரி என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு டிஸ்கவுண்ட் (நேரடி விலை குறைப்பு மற்றும் பேங்க் ஆபர்) கிடைக்கும்?

1. ஐக்யூ இஸட்10 லைட் 5ஜி (iQOO Z10 Lite 5G): இது அசல் விலையான ரூ.13,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கும்.
2. போக்கோ எம்6 பிளஸ் 5ஜி (Poco M6 Plus 5G): இது அசல் விலையான ரூ.14,499 க்கு பதிலாக ரூ.10,299 க்கு வாங்க கிடைக்கும்.

3. ரெட்மி 15 5ஜி (Redmi 15 5G): இது அசல் விலையான ரூ.19,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும்.
4. ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G): இது அசல் விலையான ரூ.12,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கும்.

5. ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 14 Pro Plus 5G): இது அசல் விலையான ரூ.34,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும்.
6. ரியல்மி நார்சோ 80எக்ஸ் (Realme Narzo 80x): இது அசல் விலையான ரூ.15,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கும்.

7. ரியல்மி நார்சோ 80 ப்ரோ (Realme Narzo 80 Pro): இது அசல் விலையான ரூ.23,999 க்கு பதிலாக ரூ.16,499 க்கு வாங்க கிடைக்கும்.
8. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4): இது அசல் விலையான ரூ.24,999 க்கு பதிலாக ரூ.18,499 க்கு வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- OIS ஆதரவு உடன் 50MP ப்ரைமரி கேமரா + 8MP இரண்டாம் நிலை கேமரா
- 16MP செல்பீ கேமரா
- 100W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,500mAh பேட்டரி

போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.79 இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ சிப்செட்

- 8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ்
- விர்ச்சுவல் ரேம் அம்சம் வழியாக 16ஜிபி ரேம்
- டூயல் ரியர் கேமரா யூனிட்
- 108 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் (3எக்ஸ் இன்-சென்சார் ஜூம் ஆதரவு) மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்
- 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,030mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Sale 2025 Best Deals on Mobile Phones Including OnePlus Nord CE 4 Redmi 15 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X