Home
Mobile

கொட்டுது ஆர்டர்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா..மலிவு விலையில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

பண்டிகை காலம் என்பதால் அமேசான் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் மிகவும் கம்மி விலையில் கிடைக்கிறது. தற்போது நடைபெறும் அமேசான் சிறப்பு விற்பனையில் தரமான சாம்சங் 5ஜி போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போது சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G) ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை தற்போது வெறும் ரூ.11,990-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் கேலக்ஸி எம்14 5ஜி போனை வாங்கினால் ரூ.1,199 தள்ளுபடி கிடைக்கும். இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

50MP கேமரா..மலிவு விலையில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 1080 x 2408 பிக்சல், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாம்சங் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1330 சிப்செட் உடன் Mali G68 GPU ஆதரவு உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த கேமிங் வசதிகளுக்கு இந்த போன் அருமையாகப் பயன்படும். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் இந்த போனின் கேமரா வசதியும் அருமையாக உள்ளது.

அதாவது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் . எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் பாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

50MP கேமரா..மலிவு விலையில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

5ஜி, புளூடூத் 5.2, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 206 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 6000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் 5ஜி சேவையைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ப்ளூ, டார்க் ப்ளூ மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கம்மி விலையில் ஒரு நல்ல 5ஜி போனை வாங்க விரும்பும் பயனர்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது. அதேபோல் சாம்சங் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
amazon sale 2023: Samsung Galaxy M14 5G is available at 33 percent discount: check new price:Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X