Home
Mobile

யாரு விடுவா? 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

தற்போது நடைபெறும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் எனும் சிறப்பு விற்பனையில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கம்மி விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க நினைக்கும் மக்கள் இந்த சிறப்பு விற்பனையை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

அதேபோல் இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் அசத்தலான ரெட்மி நோட் 11டி 5ஜி (Redmi Note 11T 5G) ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட இந்த போனுக்கு தற்போது 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

யாரு விடுவா?  50MP கேமரா.. ஆஃபரில்  Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் இப்போது ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி + (FHD+) எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 90Hz high refresh rate), கார்னிங் கொரில்லா கிளாஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (240Hz touch sampling rate) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் டைமன்சிட்டி 810 அக்டோ-கோர் 5ஜி (MediaTek Dimensity 810 Octa-core 5G) சிப்செட் வசதி உள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த போனின் எடை மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

யாரு விடுவா?  50MP கேமரா.. ஆஃபரில்  Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி (Internal storage) கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதேபோல் ரெட்மி நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Sale 2023: Redmi Note 11T 5G is available at 31 percent discount: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X