அப்படி போடு.. 50எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. புது ரியல்மி போனுக்கு ஆஃபர்.. எந்த மாடல்?
ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி (Realme Narzo 60x 5G) எனும் ஸ்மார்ட்போனை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது ரியல்மி. இந்நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் எனும் சிறப்பு விற்பனையில் இந்த அசத்தலான ரியல்மி நார்சோ 60எக்ஸ் போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் போனுக்கு தற்போது 16 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி போனை இப்போது ரூ.13,499 விலையில் வாங்க முடியும். மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த அசத்தலான ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+) பிராசஸர் வசதியுடவெளிவந்துள்ளது. மேலும் இதனுடன் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு அருமையாக இருக்கும்.
அதேபோல் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. பின்பு Realme UI 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் 1080 X 2400 பிக்சல்ஸ், 680 நிட்ஸ் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவுடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின்ன வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
இந்த போனில் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் எடை 190 கிராம் ஆகும். குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








