Home
Mobile

இதுக்கு மேல என்னங்க வேணும்.. ரூ.8999 போதும்.. 50MP கேமரா உடன் கிடைக்கும் 5ஜி போன்.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவில் ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

அதாவது அமேசான் தளத்தில் ஐடெல் பி55 5ஜி (itel P55 5G) ஸ்மார்ட்போனுக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கும் பயனர்கள் ரூ.1000 தள்ளுபடி பெறமுடியும். எனவே இந்த போனை வெறும் ரூ.8,999 விலையில் வாங்க முடியும்.

இதுக்கு மேல என்னங்க வேணும்..  50MP கேமரா உடன் கிடைக்கும் 5ஜி போன்..

ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (HD+ IPS Display) வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போன் . பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். பின்பு சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint sensor) கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Dimensity 6080 6nm processor) கொண்டுள்ளது இந்த போன். இதனுடன் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (18W fast charging support) கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி இதில் உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐடெல் நிறுவனம்.

இதுக்கு மேல என்னங்க வேணும்..  50MP கேமரா உடன் கிடைக்கும் 5ஜி போன்..

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்ட்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஐடெல் பி55 5ஜி போன். அதேபோல் இந்த போனை பச்சை மற்றும் நீல நிறங்களில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் ஐடெல் பி55 5ஜி ஸ்மார்ட்போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் ஐடெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
amazon sale 2023: itel P55 5G 5G available at 26 percent discount: check all details her : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X