Amazon-ன் அய்யயோ ஆபர்.. அசல் விலைக்கு டாட்டா.. Offer விலையில் OnePlus 13, OnePlus 13R, OnePlus 13s மாடல்கள்!
போற போக்கை பார்த்தால் எல்லா பக்கமும்.. எல்லோர் கைகளிலும் ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன்கள் தான் இருக்கும் போலயே என்றும் கூறும்படியாக.. ஒருபக்கம் "மினி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்" ஆக அறிமுகமான ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடலின் விற்பனை சக்கைபோடு போட்டுக்கொண்டு இருக்கிறது.
நேற்று ரூ.30,000-ஐ ஒட்டிய பட்ஜெட்டில் ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இப்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது ஒன்பிளஸ் 13 (OnePlus 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மாடல்கள் மீதான அதன் ப்ரைம் டே சேல் ஆபர் (Prime Day 2025 Sale Offer) குறித்த விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.69,999 என்கிற ஆரம்ப விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் - ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ள - அமேசான் ப்ரைம் டே 2025 விற்பனையில் அபாரமான தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ப்ரைம் டே 2025 விற்பனையின் போது ரூ.59,999 க்கு (வங்கி சலுகை உட்பட) வாங்க கிடைக்கும் என்பதை அமேசான் வலைத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த மாடலில் ரூ.66,497 வரை எக்ஸ்சேஞ்ச் ஆபர் கிடைக்கும் என்றும், நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் ரூ.5,833 முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 13 மீது மட்டுமின்றி ஒன்பிளஸ் 13ஆர் மாடல் மீதும் டிஸ்கவுண்ட் கிடைக்கும். ப்ரைம் டே 2025 விற்பனையின் போது ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது அதன் அசல் அறிமுக விலையான ரூ.42,999 க்கு பதிலாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல ஒன்பிளஸ் 13எஸ் மாடல் ஆனது ரூ.54,999 க்கு பதிலாக ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கும் என்றும் அமேசான் லிஸ்டிங் குறிப்பிடுகிறது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- Android 15 ஓஎஸ் அடிப்படையிலான OxygenOS 15.0 ஓஎஸ்
- ட்ரிபிள் 50-மெகாபிக்சல் சென்சார்களை கொண்ட ஹசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- ஐபி 68+ ஐபி 69 ரேட்டிங்
- 100W வயர்டு SuperVOOC சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி
ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 1264 x 2780 பிக்சல்ஸ்
- 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி
- 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை
- ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்
- 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார்
- 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- ஆக்வா டச் 2.0 தொழில்நுட்பம், க்ளோவ் மோட்
- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு


Click it and Unblock the Notifications








