Home
Mobile

அமேசான்: பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனை வாங்க அருமையான வாய்ப்பு.!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் இன்று அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இன்று நடைபெறும் அமேசான் பிரைம் தின விற்பனையில் இந்த கேலக்ஸி எம்21 2021 எடிஷன் சாதனத்திற்கு குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

அமேசான்:பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்ஸ்மார்ட்போன்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்ட
சலுகைகள் குறித்து பார்க்கையில், எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் ஈ.எம்.ஐக்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு1,080x2,340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி உடன் Mali-G72 MP3 GPU ஆதரவும் உள்ளது. மேலும் One UI Core சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த சிப்செட் வசதி
கேமிங் உட்பட அனைத்து வசதிகளுக்கும் மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட
பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் துல்லியமான புகைப்படங்களை எடுக்க உதவும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன். குறிப்பாக ஆர்க்டிக் ப்ளூ மற்றும் சார்கோல்
நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேபோல் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Prime Day Sale: The Samsung Galaxy M21 2021 Edition goes on sale today with offers : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X