உனக்கு தான் ராஜா வெயிட்டிங்.. Amazon Prime Day Sale.. ஜூலை 4-6 வரை.. மிஸ் பண்ணவே கூடாத 13 மொபைல் ஆபர்கள்!
பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவானது (Amazon India), அதன் அடுத்த சிறப்பு விற்பனைக்கான (Next Sale) தேதிகளை அறிவித்த கையோடு, அதில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அபாரமான தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்கிற (Best Smartphone Deals) பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
அமேசான் ப்ரைம் டே சேல் (Amazon Prime Day Sale) ஆனது வருகிற ஜூலை 4 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல, இந்த விற்பனையிலும் ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகளே அதிகம் என்பது போல் தெரிகிறது.

ஏனென்றால் இந்த விற்பனை நடக்கும் 3 நாட்களிலும் - லாவா, ரெட்மி, ஐக்யூ தொடங்கி ஆப்பிள், ஒன்பிளஸ், சாம்சங் வரையிலாக - கிட்டத்தட்ட எல்லா பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் மாடல்களுமே ஆபர் விலையில் கிடைக்கும் என்று அமேசான் இந்தியா வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வரையிலாக சரியான ஆபர் விலை வெளிப்படுத்தப்படவில்லை.
என்னென்ன ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன?
ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5)
ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R)
சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G)
ஒன்பிளஸ் நார்த் 6 (OnePlus Nord 6)
ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G)
ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி (Redmi A7 Pro 5G)
ஆப்பிள் ஐபோன் 17 (Apple iPhone 17)
ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (Realme Narzo 100 Lite 5G)
சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G)
ஒன்பிளஸ் 13 (OnePlus 13)
ஐக்யூ 15ஆர் (iQOO 15R)
விவோ வி70 5ஜி (Vivo V70 5G)
லாவா போல்ட் என்2 5ஜி (Lava Bold N2 5G)
மேற்கண்ட எல்லா ஸ்மார்ட்போன்களுமே தள்ளுபடி அல்லது குறைக்கப்பட்ட விலைகளின் கீழ் விற்கப்படும் என்று அமேசான் பட்டியலிட்டுள்ளது. ஆனால், முன்னரே குறிப்பிட்டபடி, சரியான ஆபர் விலையை வெளிப்படுத்தவில்லை. மாறாக மறைக்கப்பட்ட விலைகளை பட்டியலிட்டுள்ளது. இவைகள் ஜூலை 4 ஆம் தேதி அன்று வெளிப்படுத்தப்படலாம்.
மேலே உள்ள ஸ்மார்ட்போன்களின் மிகவும் லேட்டஸ்ட் மாடல் ரெட்மி டர்போ 5 தான். இது கடந்த ஜூன் 19 ஆம் தேதி தான் முதல் விற்பனையையே சந்தித்து இருந்தது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.37,999 க்கும், ஹை-எண்ட் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.40,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.59-இன்ச் 1.5கே (1,268 × 2,756 பிக்சல்கள்) 12-பிட் அமோஎல்இடி டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 3500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 68.7 பில்லியன் கலர்ஸ், 2,560Hz இன்ஸ்டன்ட் டச் சாம்ப்ளிங் ரேட், 480Hz டச் சாம்ப்ளிங் ரேட், 3,840Hz PWM டிம்மிங், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision)
- ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட்
- ARM மாலி-G720 MC8 GPU
- LPDDR5x அல்ட்ரா ரேம் மற்றும் UFS 4.1 இன்-பில்ட் ஸ்டோரேஜ்
- ஹீட் மேனேஜ்மென்ட்டிற்கான 5300 சதுர மிமீ வெப்பச் சிதறல் பரப்பளவைக் கொண்ட 3டி ஐஸ்-லூப் கூலிங் (3D Ice-Loop Cooling) சிஸ்டம்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.5) சென்சார் (Sony IMX882) பிரைமரி கேமரா
- இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆகியவைகளை கொண்டுள்ளது
- 8 மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ரா-வைட் கேமரா
- 20 மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- 4K/60 fps தரத்தில் வீடியோ ரெக்கார்டிங்
- கேமரா லென்ஸ்களை சுற்றி 'Redmi Pixel Matrix' அம்சம்
- 7,540mAh பேட்டரி
- USB Type-C போர்ட் வழியாக 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக இது IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்
- டூயல் சிம் (dual SIM) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ்3 (HyperOS 3)
- நான்கு வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு வருட செக்யூரிட்டி அப்டேட்கள்


Click it and Unblock the Notifications