Amazon Sale: இனி ஒன்பிளஸ் நோர்ட் பக்கமே போக மாட்டீங்க: 108எம்பி அல்ட்ரா கேமரா கொண்ட Tecno போனுக்கு தள்ளுபடி.!
அமேசான் தளத்தில் தற்போது அமேசான் பிரைம் டே சேல் (Amazon Prime Day Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ், சாம்சங், ரெட்மி, விவோ, டெக்னோ உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பல முன்னணி நிறுவனங்களின் டேப்லெட், லேப்டாப், ஸ்பீக்கர்கள், இயர்பட்ஸ் உள்ளிட்ட பல சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி (Tecno Camon 20 Premier 5G) ஸ்மார்ட்போனுக்கு கூட தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது நடைபெறும் அமேசான் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.28,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் போன்களை வாங்குவதை விட 108எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் தரமான சிப்செட் கொண்ட இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி போனை வாங்குவது மிகவும் நல்லது.
இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் டெக்னோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 6என்எம் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் HiOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி இதில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பதால் நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெக்னோ நிறுவனம்.
இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா (RGBW sensor) + 108எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.டூயல் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு செரினிட்டி ப்ளூ மற்றும் டார்க் வெல்கின் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








