Home
Mobile

Amazon Prime Day Offers: புதிய சாம்சங் போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி.! முந்துங்கள்.!

அமேசான் தளத்தில் இன்று (ஜூலை 23) Amazon Prime Day Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக அமேசான் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், டிவி,லேப்டாப், டேப்லெட் எனப் பல சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி மற்றும் கேலக்ஸி எம்13 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி மற்றும் கேலக்ஸி எம்13 5ஜி

அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்த்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி மற்றும் கேலக்ஸி எம்13 5ஜி மாடல்கள்
விற்பனைக்கு வந்துள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் அட்டகாசமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 சூப்பர் சலுகை

சூப்பர் சலுகை

அதாவது ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி சாம்சங் கேலக்ஸி எம்13 சீரிஸ் மாடல்களை வாங்கினால் ரூ.2000வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி விலை

சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட வேரியண்டின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.

எனவே இந்த சிறப்பு விற்பனையில் ரூ.9,999 மற்றும் ரூ.11,999-விலைகளில் இந்த கேலக்ஸி எம்13 4ஜி போனை வாங்க முடியும்.

 சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி விலை

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட வேரியண்டின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.

எனவே இந்த சிறப்பு விற்பனையில் ரூ.11,999 மற்றும் ரூ.13,999-விலைகளில் இந்த கேலக்ஸி எம்13 5ஜி போனை வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி அம்சங்கள்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எம்13 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் இன்பினிட்டி-வி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பின்பு இந்த புதிய போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 கேலக்ஸி எம்13 4ஜி போனில் சூப்பர் கேமராக்கள்

கேலக்ஸி எம்13 4ஜி போனில் சூப்பர் கேமராக்கள்

கேலக்ஸி எம்13 4ஜி போனில் சூப்பர் கேமராக்கள் உள்ளன என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல அருமையான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.

 தரமான சிப்செட்

தரமான சிப்செட்

புதிய கேலக்ஸி எம்13 4ஜி போனில் தரமான எக்ஸிநோஸ் 850 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக ஆப்ஸ்களை பயன்படுத்துவதற்கு அருமையாகஉதவும் இந்த எக்ஸிநோஸ் 850 சிப்செட். மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது கேலக்ஸி எம்13 4ஜி மாடல்.

கேலக்ஸி எம்13 5ஜி டிஸ்பிளே மற்றும் சிப்செட்

கேலக்ஸி எம்13 5ஜி டிஸ்பிளே மற்றும் சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

 கேலக்ஸி எம்13 5ஜி கேமரா

கேலக்ஸி எம்13 5ஜி கேமரா

புதிய கேலக்ஸி எம்13 5ஜி போன் ஆனது 50எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக கேலக்ஸி எம்13 5ஜி போனின் கேமராவை விட கேலக்ஸி எம்13 4ஜி மாடலின் கேமரா தான் மிகவும் அருமையாக உள்ளது.

 கேலக்ஸி எம்13 5ஜி நிறங்கள்

கேலக்ஸி எம்13 5ஜி நிறங்கள்

கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் அக்வா கிரீன், மிட்நைட் ப்ளூ மற்றும் ஸ்டார்டஸ்ட் பிரவுன் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு
5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் 15W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும்
இதில் உள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

அதேபோல் வைஃபை, 5ஜி, புளூடூத், டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த புதிய கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Prime Day Sale 2022: Discount on Samsung Galaxy M13 Series : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X