Amazon Prime Day 2021: குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.!
அமேசான் வலைதளத்தில் Amazon Prime Day 2021 எனும் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு விற்பனை ஜூலை 26-ம் தேதி முதல் ஜூலை 27-வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த அமேசான தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை வாங்கினால் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும். மேலும் இப்போது அமேசான் தளத்தில் விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
இந்த சிறப்பு விற்பனையில் ரெட்மி 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.19,999-விலையில் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.22,999-ஆக உள்ளது. 108எம்பி ரியர் கேமரா, 5020 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான
அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.8499-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.6999-ஆக உள்ளது. 13எம்பி ரியர் கேமரா, 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்.
எம்ஐ 10ஐ 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.21,999-விலையில் வாங்க முடியும். மேலும் 108எம்பி ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட், 4820 எம்ஏஎச் பேட்டரி உட்பட
பல்வேறு சிறப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.86000-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.77999-விலையில் வாங்க முடியும். 6.7-இன்ச் டிஸ்பிளே, 64எம்பி ரியர் கேமரா, 4300 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட
பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
iQOO Z3 5G ஸ்மார்ட்போனின் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.24990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.20999-விலையில் வாங்க முடியும்.
iQOO 7 Legend 5G ஸ்மார்ட்போனின் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.44990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.39990-விலையில் வாங்க முடியும். இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி, 48எம்பி ரியர் கேமரா
உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
இதுதவிர பல்வேறு அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பல்வேறு மக்கள் இந்த விலைகுறைப்பு சலுகையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications