அமேசான் பிரைம் தின தள்ளுபடியில் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.!

|

அமேசான் பிரைம தின விற்பனையில் பல்வேறு அசத்தலான ஸ்மார்ட்போன், லேப்டாப், டெப்லேட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று துவங்கியது இந்த சிறப்பு விற்பனை. அதேபோல் இந்த சிறப்பு விற்பனை இன்று
முடிவடைகிறது.

அமேசான் பிரைம் தின தள்ளுபடியில் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.!

குறிப்பாக இன்று அமேசான் பிரைம் தின விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த ஸ்மார்ட்போன்களை வாங்கினால் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த சிறப்பு விற்பனையில்தள்ளுபடி விலையில் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.15,999-ஆக உள்ளது. ஆனால் தற்போது இந்த சிறப்பு விற்பனையில் ரூ.3000 விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்திற்கு 19 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்12
சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனுக்கு 15 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.10,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 9 பிரைம்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.11,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.9,999-விலையில் வாங்க முடியும். அதாவது இந்த சாதனத்திற்கு 17 சதிவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி11
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி11 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.7,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனை மூலம் ரூ.6,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு 16 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்11
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.9,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்திற்கு 33 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளளது.

நோக்கியா ஜி20
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.12,990-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்திற்கு 13 சதிவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்02
சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் மாடலின் அசல் விலை ரூ.7,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.7.499-விலையில் வாங்க முடியம். மேலும் இந்த சாதனத்திற்கு 6 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்31
சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.21,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.19,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Prime Day 2021: Best Offers on New Budget Smartphones: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X