Samsung முதல் Nokia வரை: ரூ.6000 இருந்தாலே புது போன் வாங்கலாம்: தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய Amazon
அமேசான் தளத்தில் தற்போது போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது Upgrade Days எனும் சிறப்பு விற்பனை தான் இப்போது அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் டிசம்பர் 14-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீதம் உடனடி தள்ளுபடி
அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் ஸ்மார்ட்போன்களை வாங்கும் பயனர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த சிறப்பு விற்பனையில் கம்மி விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்களை இப்போது பார்ப்போம்.

iQOO Z6 Lite 5G போன்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனை இப்போது அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும்.
ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட், 50எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி,ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எம்13
அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்13 போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனை தற்போது ரூ.9,699-விலையில் வாங்க முடியும். குறிப்பாக அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்13 அம்சங்கள்
6000 எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆணட்ராய்டு 12 இயங்குதளம், 8எம்பி செல்பி கேமரா, எக்ஸிநோஸ் 850 பிராஸசர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போன்.

ரெட்மி ஏ1
அமேசான் தளத்தில் ரெட்மி ஏ1 ஸ்மார்ட்போனுக்கு 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ், 8எம்பி டூயல் ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 11
அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.
50எம்பி குவாட் ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 6.43-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ஆக்டோ-கோர் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்.

ரியல்மி narzo 50
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி narzo 50 ஸ்மார்ட்போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த
ஸ்மார்ட்போனை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நோக்கியா ஜி11
அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனை ரூ.11,499-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 1250 தள்ளுபடி கிடைக்கும்.
6.5-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5050 எம்ஏஎச் பேட்டரி, Unisoc T606 பிராசஸர், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்32 பிரைம் எடிஷன்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்32 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
64எம்பி குவாட் ரியர் கேமரா, 20எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 ஆக்டோ-கோர பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டு இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications