Just In
- 17 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 20 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 20 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 21 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அமேசானின் 3-வது ஸ்மார்ட்போன் அறிமுகம்: வெறும் ரூ.4,999/-க்கு.!
அமேசான் நிறுவனத்தின் சொந்த நிறுவனமான 10.ஆர் பிராண்ட் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையையும் ஆட்கொள்ளும் அதன் திட்டத்தை மெல்ல மெல்ல வெளிப்படுத்தி வருகிறது.
அமேசான் இன்று அதன் 10.ஆர் டி (டெனோர் டி) எனப்படும் மற்றொரு சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. வெறும் ரூ.4,999/- என்ற விலை நிர்ணயம் கொண்டு அறிமுகமாகியுள்ள இக்கருவி, சமீபத்தில் தொடங்கப்பட்ட சூடான சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை (குறிப்பாக ரெட்மீ 5ஏ) ஒருவழி செய்யப்போகிறது என்றே கூறலாம்.

மிகவும் மலிவான விலை நிர்ணயம்
அமேசான் நிறுவனத்தின் 10.ஆர் பிராண்ட் வெளியிட்டுள்ள மூன்று ஸ்மார்ட்போன்களில் 10.ஆர் டி தான் மிகவும் மலிவான விலை நிர்ணயம் கொண்டுள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களான 10.ஆர் ஜி மற்றும் 10.ஆர் ஈ ஆகியவைகள் சற்று பெரிய விலை நிர்ணயம் (11கே மற்றும் 8கே பட்ஜெட்) கொண்ட கருவிகளாகும். ஆனால் விலைக்கு ஏற்ற நியாயமான அம்சங்களை கொண்டுள்ளன.

10.ஆர் ஜி மற்றும் 10.ஆர் ஈ
10.ஆர் ஜி ஆனது ரூ.10,999/- என்கிற விலை புள்ளியில் துவங்குகிறது மற்றும் அது ஒரு இரட்டை லென்ஸ் அமைப்பை கொண்டுள்ளது, மறுகையில் உள்ள 10.ஆர் ஈ ஆனது ரூ.7,999/-க்கு தொடங்கி அதன் மலிவான உடன்பிறப்புடன் ஒப்பிடுகையில் ஒரு பெரிய திரை மற்றும் பேட்டரித்திறன் கொண்டு வருகிறது.

சியோமியை விட சற்று அதிக அம்சங்கள்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 10.ஆர் டி ஆனது ரெட்மீ 5 ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்களுடன் ஒற்றுப்போகிறது. எனினும், இந்த புதிய பிராண்ட் சியோமியை விட சற்று அதிக அம்சங்களை வழங்குகிறது என்றே கூறலாம்.

பிங்கர் பிரிண்ட் சென்சார்
அறிவிக்கப்பட்டுள்ள 10.ஆர் டி ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமானது அதன் கைரேகை சென்சார் தான். 5கே என்கிற சூப்பர் பட்ஜெட் பிரிவில் பிங்கர் பிரிண்ட் சென்சார் அம்சமென்பது சிறப்பான காரியம் தான். மேலும் 10.ஆர் டி ஒரு சிறந்த பேட்டரி ஆயுளை வழங்கும் 3500எம்ஏஎச் பேட்டரியானது கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 425 செயலி
விவரக்குறிப்புகள் அடிப்படையில், 10.ஆர் டி ஆனது அட்ரெனோ 308 ஜிபியூ உடனான 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் செயலி, ஸ்னாப்டிராகன் 425 செயலி (கார்டெக்ஸ் ஏ53) பொருத்தப்பட்டுவருகிறது. செயலிக்கு வசதியாக, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் ஆகியவற்றை நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இது மீண்டும் ரெட்மீ 5ஏ அம்சத்தினை ஒத்ததாக உள்ளது. சேமிப்புக்காக 16 ஜிபி சேமிப்பு அல்லது 32 ஜிபி அளவை பயன்படுத்தலாம்.

13 மெகாபிக்சல் முதன்மை கேமரா
டிஸ்பிளேவை பொறுத்தமட்டில் 720x1280 என்கிற தீர்மானம் கொண்ட 5.2 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது. கேமராத்துறையில், 5 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. 10.ஆர் டி ஆனது ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் இயங்குதளத்தை அதன் பெட்டிக்கு வெளியே கொண்டுள்ளது. உடன் இந்த சாதனம் கிண்டேல் மற்றும் ப்ரைம் வீடியோ போன்ற ஒரு சில அமேசான் பயன்பாடுகளையும் தன்னுள் கொண்டு வருகிறது.

10 நாட்களுக்கு காத்திருப்பு நேரம்
முன்னர் குறிப்பிட்டபடியே இக்கருவி அதன் பின்புற குழுவில் 3500 எம்ஏஎச் பேட்டரி அமைப்பை கொண்டுள்ளது. நிறுவனத்தின்படி, இது இரண்டு நாட்களுக்கு பேட்டரி ஆயுள் மற்றும் 10 நாட்களுக்கு காத்திருப்பு நேரத்தை வழங்குகிறது.

3 ஜிபி / 32 ஜிபி
இதன் 2ஜிபி / 16ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.4,999/- என்றும் மற்றும் இதன் 3 ஜிபி / 32 ஜிபி அளவிலான உள்ளடக்கசேமிப்பானது ரூ.5,999/- என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் வருகிற ஜனவரி 5 அன்று நண்பகல் 12 மணிக்கு அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும். இந்த சாதனத்திற்கான முன்பதிவு ஏற்கனவே அமேசானில் தொடங்கிவிட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

பயனர் மதிப்புரைகள்
அமேசான் வெளியிட்டுள்ள தகவலின் படி, பயனர் மதிப்புரைகளை மனதில் வைத்தே இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் பின்னால் இருக்கும் அமேசான் என்கிற ஒரு பெரிய பிராண்ட்டின் பெயரை கருதி, பலதரப்பட்ட ஆரம்ப சோதனைகள் கடந்தே இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கம் பெற்றுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470