அநியாயத்துக்குனு ஆஃபர் அறிவிச்சு இருக்காங்களே.. இந்த லேட்டஸ்ட் OnePlus போனை வாங்க இதுவே சரியான நேரம்!
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது மிகப்பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் மீது அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி என்ன? தள்ளுபடி தவிர்த்து வேறு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது மீடியாடெக் டைமன்சிட்டி 8100-மேக்ஸ் சிப்செட் (MediaTek Dimensity 8100-Max SoC) மூலம் இயங்கும் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி (OnePlus 10R 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக மிகப்பெரிய தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, அதாவது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.38,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இது ரூ.34,999 க்கு அமேசான் வழியாக வாங்க கிடைக்கிறது.
கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனின் மீது கூப்பன் அடிப்படையிலான ரூ.4000 தள்ளுபடியையும் அமேசான் வழங்குகிறது. இதன் மூலம் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை ரூ.30,999 ஆக குறைக்க முடியும். மேலும் எச்டிஎச்பி கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வாங்கும் போது கூடுதலாக ரூ.1,500 தள்ளுபடியும் கிடைக்கும்.
இப்படியாக ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 29,499 க்கு கொண்டுவர முடியும். ஒருவேளை நீங்கள் உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்பினால், அதிகபட்சமாக ரூ,31,150 வரையிலான எக்ஸ்சேன்ஜ் வேல்யூ கிடைக்கும்.
அதாவது உங்கள் பழைய போனின் நிலைமைக்கு ஏற்பவே தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலமும் கூட ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி விலையை இன்னமும் குறைக்க முடியும். இதேபோன்ற ஆஃபர்களை ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி-யின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷனிலும் பயன்படுத்த முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அம்சங்களைபொறுத்தவரை, ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 12.1 கொண்டு இயக்கப்படுகிறது. 120ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல்-எச்டி+ அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே 2.5டி கர்வ்டு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100-மேக்ஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 12ஜிபி வரையிலான LPDDR5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50 மெகாபிக்சல் சோனி IMX766 மெயின் சென்சார் + 8 மெகாபிக்சல் சோனி IMX355 சென்சார் + 2 மெகாபிக்சல் GC02M1 மேக்ரோ ஷூட்டர் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் சாம்சங் ISOCELL S5K3P9 சென்சார் உள்ளது. மேலும் இது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, அது 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதே ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 150W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனும் வருகிறது. அது எண்டூரன்ஸ் எடிஷன் என்று அழைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








