அசல் விலையில் இருந்து ரூ.40,000 நேரடி தள்ளுபடி.. அடிச்சு புடிச்சு ஆர்டர் விழும் Xiaomi போன்.. என்ன மாடல்?
மிட்-ரேன்ஜ் விலையில் பவர்ஃபுல் அம்சங்களை பேக் செய்யும் ஒரு ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால்... இந்த ஷாவ்மீ (Xiaomi) ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு இதுவே சிறந்த நேரமாகும். ஏனென்றால் இ-காமர்ஸ் வலைதளமான அமேசான் இந்தியா இந்த மாடலை நம்ப முடியாத அளவிற்கு குறைந்த விலையில் விற்பனை செய்கிறது.
நாம் இங்கே பேசுவது - ஷாவ்மீ 12 ப்ரோ (Xiaomi 12 Pro) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இதன் அசல் விலை ரூ.84999 ஆகும். ஆனால் தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மீது அமேசான் இந்தியா வலைத்தளமானது முழுதாக 47% நேரடி தள்ளுபடியை (Flat Offer) வழங்குகிறது. அதாவது ரூ.40,000 என்கிற நேரடி தள்ளுபடியை வழங்குகிறது.

இதன் கீழ் நீங்கள் ஷாவ்மீ 12 ப்ரோவை வெறும் ரூ.44,999 க்கு வாங்க முடியும். அதுமட்டுமல்ல ஷாவ்மீ 12 ப்ரோ மீது சில பிரத்யேக வங்கி சலுகைகள் (Bank Offers) மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகையும் (Exchange Offer) கூட அணுக கிடைக்கிறது. எல்லாவற்றையும் சரியாக பயன்படுத்தும் பட்சத்தில் ஷாவ்மீ 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் இறுதி விலையை (Final Price) இன்னும் குறைக்க முடியும்.
வங்கி சலுகைகளை பொறுத்தவரை, எச்டிஎப்சி (HDFC) பேங்க் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.2000 என்கிற உடனடி தள்ளுபடி கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ஐசிஐசிஐ (ICICI) வங்கி கிரெடிட் கார்டுகளை (அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு தவிர்த்து) பயன்படுத்தினாலும் கூட உங்களுக்கு ரூ.2000 என்கிற உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
மேற்கண்ட 2 வங்கிகளின் கார்டுகளும் உங்களிடம் இல்லை மாறாக எச்எஸ்பிசி (HSBC) கேஷ்பேக் கார்டு கிரெடிட் கார்டு மட்டுமே உள்ளது என்றால், அதை பயன்படுத்தி ஷாவ்மீ 12 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கினால் உங்களுக்கு 5% உடனடி தள்ளுபடி (ரூ.250 வரை) கிடைக்கும்.
எக்ஸ்சேன்ஜ் சலுகையை பொறுத்தவரை, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்து, அதற்கு பதிலாக ஷாவ்மீ 12 ப்ரோவை வாங்கினால், உங்களுக்கு ரூ.42,749 வரையிலான எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி கிடைக்கும். இருப்பினும், இந்த எக்ஸ்சேன்ஜ் வேல்யூ (Exchange Value) ஆனது நீங்கள் பரிமாற்றம் செய்யும் ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் அது வேலை செய்யும் நிலையை பொறுத்து வேறுபடும்.
எனவே எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை தேர்வு செய்வதற்கு முன்னதாக உங்கள் பழைய ஸ்மார்ட்போன் சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பதையும், அதில் எந்த விதமான சேதமும் (Damage) இல்லை என்பதையும் உறுதிப்படுத்தி கொள்ளவும். கூடவே நீங்கள் வசிக்கும் பகுதியில் எக்ஸ்சேன்ஜ் சலுகை அணுக கிடைக்கிறதா என்பதையும் உங்கள் பின் கோட்-ஐ (PIN Code) உள்ளீடு அறிந்து கொள்ளவும்.
ஷாவ்மீ 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2021 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகமான ஒரு ஸ்மார்ட்போனாகும். அதாவது ஒன்றரை ஆண்டுகள் பழைய ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது இதை நம்பி வாங்கலாமா வேண்டாமா என்கிற சந்தேகம் உங்களுக்குள் எழுந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.
இந்த இடத்தில், ஷாவ்மீ 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் நிறை மற்றும் குறைகளை (Pros and Cons) நீங்கள் அறிந்துகொள்வதன் மூலம் ஒரு தெளிவான முடிவிற்கு வர முடியும். நிறைகளை பொறுத்தவரை, இதன் டிஸ்பிளே ஒரு முக்கியமான பிளஸ் பாயிண்ட் ஆகும். இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
அடுத்தாக இதன் கேமரா செட்டப்பில் ஒரு குறையும் சொல்ல முடியாது. ஏனென்றால் இதில் 50எம்பி மெயின் சென்சார் + 50எம்பி அல்ட்ராவைடு சென்சார் + 50எம்பி டெலிஃபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது
குறைகளை பொறுத்தவரை, ஷாவ்மீ 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஐபி ரேட்டிங் இல்லை; நல்ல சார்ஜிங் ஸ்பீட் இருந்தாலும் கூட பெரிய பேட்டரி இல்லை. இது 4600எம்ஏஎச் பேட்டரியை மட்டுமே பேக் செய்கிறது. இது தவிர்த்து ஷாவ்மீ ஸ்மார்ட்போனில் பெரிதாக எந்த குறையையும் சொல்லிவிட முடியாது.


Click it and Unblock the Notifications