சரியான நேரம்: அமேசான் ஆப்பிள் தின விற்பனை- அட்டகாச தள்ளுபடிகள் அறிவிப்பு!

|

அமேசான் ஆப்பிள் தின விற்பனையில் ஐபோன் 11 மாடல் ரூ.62,900 என்ற விலையில் கிடைக்கிறது. முன்னதாக இந்த மாடல் ரூ.68,300 என்ற விலையில் விற்கப்பட்டது.

ஆப்பிள் தின விற்பனை

ஆப்பிள் தின விற்பனை

அமேசான் இந்தியா தளத்தில் ஆப்பிள் தின விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபோன் 11 சீரிஸ், ஐபோன் 8 ப்ளஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆப்பிள் ஐபாட் மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட வகைகளுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியாவில் இந்த விற்பனை ஜூலை 25 வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

ஈர்க்கக்கூடிய வகையிலான தள்ளுபடி

ஈர்க்கக்கூடிய வகையிலான தள்ளுபடி

இதில் குறிப்பிடத்தகுந்த அறிவிப்பு என்னவென்றால் ஆப்பிள் தின விற்பனையில் ஆப்பிள் ஐபோன் 11 மாடலுக்கு ஈர்க்கக்கூடிய வகையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 11 மாடலானது முன்னதாக ரூ.68,300 என்ற விலையில் விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த அறிவிப்பின் மூலம் ரூ.62,900 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது.

ஹெச்டிஎப்சி வங்கி டெபிட் கார்ட்

ஹெச்டிஎப்சி வங்கி டெபிட் கார்ட்

ஐபோன் 11 ப்ரோ மாடலானது முன்னதாக ரூ.1,06,100 என்ற விலையில் விற்கப்படுகிறது. அதேபோல் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடலானது ரூ.1,17,100 என்ற விலையில் விற்கப்படுகிறது. இதற்கு தள்ளுபடிகள் நேரடியாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஹெச்டிஎப்சி வங்கி டெபிட் கார்ட் மூலம் வாங்கும்போது ரூ.4000 தள்ளுபடி கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மெகா ஹேக்கிங்:ரூ.89 லட்சம் அபேஸ்: 1000 கொடுத்தால் 2000 என ட்வீட்- வாரி வழங்கிய மக்கள்!மெகா ஹேக்கிங்:ரூ.89 லட்சம் அபேஸ்: 1000 கொடுத்தால் 2000 என ட்வீட்- வாரி வழங்கிய மக்கள்!

கவர்ச்சிகரமான விலை

கவர்ச்சிகரமான விலை

ஐபோன் 8 ப்ளஸ் 64 ஜிபி மாடலானது முன்னதாக ரூ.41,999 என்ற விலையில் விற்கப்பட்டது தற்போது இதன் விலை ரூ.41,500 என்ற விலையில் கிடைக்கிறது. ஐபோன் 7 சீரிஸ் மாடல் கவர்ச்சிகரமான விலையில் வழங்கப்படுகிறது. அதோடு கூடுதலாக ஆப்பிள் மாடல்களுக்கு விலை இல்லாத இஎம்ஐ மற்றும் எச்டிஎப்சி வங்கி டெபிட், கிரெடிட் கார்ட் மூலம் வாங்கும்போது கூடுதல் தள்ளுபடிகள் கிடைக்கிறது.

இன்று நள்ளிரவு முதல்

இன்று நள்ளிரவு முதல்

அதேபோல் ஆப்பிள் தின விற்பனையில், ஆப்பிள் ஐபாட் தொடருக்கு ரூ.5000 வரை தள்ளுபடியும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 க்கு ஹெச்டிஎப்சி வங்கி டெபிட் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கும்போது ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. அமேசான் இந்தியா தளத்தில் நள்ளிரவு முதல் ஆப்பிள் மாடல்களை தள்ளுபடியோடு வாங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Amazon india announced apple days sale with different deals and offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X