Home
Mobile

SALE பிச்சிக்குது.. ரூ.16,748 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 66W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் சம்மர் சேலில் (Amazon Great Summer Sale) இதுவரை கிடைக்காத டிஸ்கவுண்ட்டில் லாவா அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G) போன் கிடைக்கிறது. 3டி கர்வ்ட் மெயின் டிஸ்பிளே மட்டுமல்லாமல், செகண்டரி டிஸ்பிளேவையும் கொடுக்கும் இந்த லாவா மாடலில் டிஸ்பிளே, சிப்செட், கேமரா போன்ற முக்கிய பீச்சர்கள் பட்ஜெட்டில் கிடைக்காத பீச்சர்களாக இருக்கின்றன. இந்த லாவாவின் விலை விவரங்கள் மற்றும் பீச்சர்களை இப்போது பார்ப்போம்.

இந்த லாவா அக்னி 3 5ஜி போனின் மார்கெட் விலையை பொறுத்தவரையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆகவும் (சார்ஜருடன் ரூ.22,999), 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் கிரேட் சம்மர் சேலில் ரூ.20,998 ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

SALE பிச்சிக்குது.. ரூ.16,748 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா!

இந்த விலையிலும் ரூ.3,500 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.750 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,748 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதுபோக ரூ.19,850 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. இந்த லாவா போனில் பிரிஸ்டைன் கிளாஸ் மற்றும் ஹெதர் கிளாஸ் ஆகிய கலர்கள் பிரீமியம் லுக் கொடுக்கிறது.

இந்திய மார்கெட்டில் டூயல் டிஸ்பிளேவுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் பட்ஜெட்டில் கிடைக்கும் மாடலாத இந்த லாவா அக்னி 3 5ஜி இருக்கிறது. 2 டிஸ்பிளேவும் அமோலெட் பேனலாக இருப்பதால், அவுட் பிரீமியமாக இருக்கும். அதேபோல சிப்செட் பர்ஃபாமென்ஸ் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் லெவலுக்கு இருக்கும்.

லாவா அக்னி 3 5ஜி அம்சங்கள் (Lava Agni 3 5G Specifications): இந்த அக்னி மாடலில் 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் (4nm Octa Core MediaTek Dimensity 7300X) சிப்செட் கிடைக்கிறது. மேலும், வழக்கமான ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேக் செய்யப்பட்டுள்ளது.

SALE பிச்சிக்குது.. ரூ.16,748 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா!

ப்ரீமியம் போன்களில் கிடைப்பதை போல ஆக்சன் கீ (Action Key) சப்போர்ட் கிடைக்கிறது. இதை ஃபிளாஷ் லைட், ஷட்டர் மற்றும் ரெக்கார்டருக்கு பயன்படுத்தலாம். மெயின் டிஸ்பிளேவானது 3டி கர்வ்ட் டிசைனில் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 429 பிபிஐ கிடைக்கிறது.

மேலும், 6.78 இன்ச் (1200 x 2652 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனல், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. செகண்டரி டிஸ்பிளேவிலும் 1.74 இன்ச் (336 x 480 பிக்சல்கள்) அமோலெட் பேனல் கிடைக்கிறது. அக்னி இன்ஸ்டாஸ்கிரீன் (Agni InstaScreen) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஸ்டாஸ்கிரீன் மூலம் செல்பீ போலவே ரியர் கேமராவிலும் வியூ கிடைக்கும். அதேபோல ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் சோனி குவாட்-பையர் சென்சார் கிடைக்கிறது. இதுபோக எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

இந்த மெயின் கேமராவுக்கு 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. இந்த லாவா அக்னி 3 5ஜி போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்தியாவில் பட்ஜெட்டில் வெளியான மற்றும் முதல் உள்நாட்டு டூயல் டிஸ்பிளே மாடலாக இது இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Amazon Great Summer Sale Lava Agni 3 5G With 50MP Camera Sale Under Rs 17000 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X