அள்ளி கொடுக்கும் அமேசான்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. ஆஃபரில் ஹானர் 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் (Amazon Great Summer Sale) பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஹானர் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஹானர் எக்ஸ்9பி 5ஜி போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அமேசான் தளத்தில் ஹானர் எக்ஸ்9பி 5ஜி போனுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.21,999 விலையில் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.18999 இருந்தால் போதும் இந்த புதிய ஹானர் எக்ஸ்9பி 5ஜி போனை வாங்கிவிட முடியும்.

ஹானர் எக்ஸ்9பி 5ஜி அம்சங்கள் (HONOR X9b 5G Specifications): 6.78-இன்ச் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவுடன் (AMOLED display) ஹானர் எக்ஸ்9பி 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 19.9:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 x 2652 பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ், 1200 நிட்ஸ் பீக் ப்ரைன்ஸ் உள்ளிட்ட பலவேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
அதேபோல் அல்ட்ரா-பவுன்ஸ் ஆன்டி-ட்ராப் 360-டிகிரி தொழில்நுட்பம் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக தனித்துவமான டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்9பி 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

குவால்காம் 4என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Qualcomm Snapdragon 6 Gen 1) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது ஹானர் எக்ஸ்9பி 5ஜி . மேலும் MagicOS 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
குறிப்பாக அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்9பி 5ஜி போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஹானர் போனை நம்பி வாங்கலாம். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.
108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்9பி 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கொண்டுள்ளது இந்த போன்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக 5ஜி, டூயல் சிம், வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டிஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
5800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
மிட்நைட் பிளாக்,எமரால்டு க்ரீன் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு நிறங்களில் ஹானர் எக்ஸ்9பி 5ஜி போனை வாங்க முடியும். அதேபோல் ஹானர் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








