Amazon இல் ஆர்டர் அள்ளுது.. OnePlus 13, iQOO 13, iPhone 15 உட்பட 9 பிரீமியம் போன்கள் மீது பலே டிஸ்கவுண்ட்!
அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் நடக்கும் அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025-ன் (Amazon Great Summer Sale 2025) கீழ் பல வகையான ஸ்மார்ட்போன்கள் மீது டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள் அணுக கிடைக்கிறது. ஒருவேளை உங்களுடைய முழு கவனமும் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் மீது இருந்தால்.. கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!
ஆப்பிள், சாம்சங், சியோமி போன்ற சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் தற்போது 40 சதவீதம் வரை தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் அமேசான் பே-அடிப்படையிலான சலுகைகள் வழியாக தாங்கள் வாங்கும் ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்க முடியும்!

1. சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S24 Ultra 5G): இது ரூ.1,34,999 க்கு பதிலாக ரூ.84,999 க்கு வாங்க கிடைக்கிறது.
2. ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 16 Pro Max): இது ரூ.1,44,900 க்கு பதிலாக ரூ.1,35,900 க்கு வாங்க கிடைக்கிறது.
3. ஐக்யூ 13 (iQOO 13): இது ரூ.61,999 க்கு பதிலாக ரூ.51,999 க்கு வாங்க கிடைக்கிறது.
4. ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15): இது ரூ.69,900 க்கு பதிலாக ரூ.57,749 க்கு வாங்க கிடைக்கிறது.
5. ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) இது ரூ.69,999 க்கு பதிலாக ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது.:
6. ஒன்பிளஸ் 13 (OnePlus 13): இது ரூ.72,999 க்கு பதிலாக ரூ.64,998 க்கு வாங்க கிடைக்கிறது
7. ஷாவ்மீ 15 (Xiaomi 15): இது ரூ.79,999 க்கு பதிலாக ரூ.64,998 க்கு வாங்க கிடைக்கிறது.
8. சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S25 Ultra 5G): இது ரூ.1,29,999 க்கு பதிலாக ரூ.1.18,999 க்கு வாங்க கிடைக்கிறது.
9. ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ (Apple iPhone 16 Pro): இது ரூ.1,29,900 க்கு பதிலாக ரூ.1,22,900 க்கு வாங்க கிடைக்கிறது.
அமேசானின் வழக்கமான விலை குறைப்புகளை தவிர, இந்த கிரேட் சம்மர் சேலின் போது எச்டிஎப்சி கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இஎம்ஐபரிவர்த்தனைகளில் 5% கேஷ்பேக் கிடைக்கும்
தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களுடைய மாடல் மற்றும் ஸ்மார்போனின் நிலையைப் பொறுத்து ரூ.72,000 வரை தள்ளுபடி பெறலாம் என்றும் அமேசான் அறிவித்துள்ளது. மேற்கண்ட கூடுதல் நன்மைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒன்பிளஸ் 13 விரிவான அம்சங்கள்: ஒன்பிளஸ் 13 டிஸ்பிளே: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது
ஒன்பிளஸ் 13 ரியர் மற்றும் செல்பீ கேமராக்கள்: கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதி 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா உள்ளது
இதோடு 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார், எப்/2.2 அபெர்க்ஷர் 3.5 செமீ மேக்ரோ உடனான 50எம்பி கேமராவும் உள்ளது. கடைசியாக 1/1.95-இன்ச் எல்ஒய்டி600, எப்/2.6அபெர்க்ஷர், ஓஐஎஸ், 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது
முந்தைய மாடல்களை போலவே ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனும் ஹசல்பிளாட் பிராண்டட் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. இந்த கேமரா செட்டப் ஆனது 4கே (60எஃப்பிஎஸ் வரை) மற்றும் 8கே வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும். முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும்.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனிற்கான மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் கேஸ்கள் தனியாக வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








