இன்றே கடைசி: ரெட்மி நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.!
அமேசான் தளத்தில் Republic Day Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி எனப் பல்வேறு சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் ரெட்மி நிறுவனத்தின் அசத்தலான ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

31 சதவீதம் தள்ளுபடி
அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் முன்பு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை தற்போது ரூ.8,299-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் வாட்டர்-டிராப் நாட்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல்ஸ், 20:9 ரேஷியோ, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
மீடியாடெக் சிப்செட்
இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் உதவியுடன் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன்.

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
இந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி ரியர் கேமரா (f2.2 aperture) ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன்.
டூயல் சிம், 4ஜி, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 194 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஆண்டு ரெட்மி நிறுவனம் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட ரெட்மி நிறுவனம் மட்டும் தான் தற்போது 5ஜி போன்களை கம்மி விலையில் விற்பனை செய்து வருகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








