ஆர்டர் அடிச்சு நொறுக்குறாங்க.. ரூ.10,999 போதும்.. 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Nokia 5ஜி போன்..
அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2024 (Amazon Great Republic Day sale 2024) எனும் சிறப்பு விற்பனை இன்று தொடங்கி உள்ளது. இன்றும் சில நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை மிகவும் கம்மி விலையில் வாங்கலாம்.
அதன்படி எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தற்போது தற்போது 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த நோக்கியா ஜி42 5ஜி போன் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரு.10,999 இருந்தால் போதும் நோக்கியா ஜி42 5ஜி போனை வாங்கிவிட முடியும்.

நோக்கியா ஜி42 5ஜி அம்சங்கள் (Nokia G42 5G specifications): 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி நோக்கியா ஜி42 5ஜி போனில் உள்ளது. மேலும் 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் (560 nits brightness) மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதி இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். மேலும் இந்த போனில் கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.
நோக்கியா ஜி42 5ஜி போனில் 6 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, மொத்தமாக 11 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி42 5ஜி வேரியண்டை நீங்கள் வாங்க முடியும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன். எல்இடி பிளாஷ், கேமராவில் நைட் மோட் 2.0 (Night Mode 2.0), ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), ஓஇசட்ஓ ஆடியோ கேப்சர் (OZO 3D Audio Capture) உள்ளிட்ட சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இதில் 50எம்பி ரியர் கேமரா இருப்பதால் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.

இதில் IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா போனில் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi - Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப் - சி 2.0 (Type-C 2.0) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
20W சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி இந்த போனில் உள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக 5ஜி சேவைக்குத் தகுந்தபடி இந்த போன் பேட்டரி பேக்கப் கொடுக்கும். குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த 5ஜி போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








