யாரு விடுவா? Snapdragon சிப்செட்.. 32MP செல்பி கேமரா.. பிரபல மோட்டோரோலா போனுக்கு தள்ளுபடி.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மோட்டோரோலா ரேசர் 40 மற்றும் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன்களுக்கு இப்போது கூட நல் வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்த போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு போன்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட உள்ளது.
அதாவது அக்டோபர் 8-ம் தேதி அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை நடைபெற உள்ளது. அதேபோல் மோட்டோரோலாவின் இணையதளத்திலும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. எனவே இந்த இரண்டு தளங்களிலும் மோட்டோரோலா ரேசர் 40 மற்றும் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன்களை கம்மி விலையில் வாங்க முடியும்.

மோட்டோரோலா ரேசர் 40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.59,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த இரண்டு தளங்களிலும் நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் இந்த மோட்டோரோலா ரேசர் 40 போனை ரூ.44,999 விலையில் வாங்க முடியும்.
அதேபோல் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் ஆனது ரூ.89,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகளுடன் சேர்த்து ரூ.72,999 விலையில் வாங்க முடியும். மேலும் இப்போது மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா (Motorola razr 40 Ultra) போன் ஆனது 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனில் 3.6-இன்ச் வெளிப்புற டிஸ்பிளே வசதியும் உள்ளது. இதன் வெளிப்புற டிஸ்பிளே ஆனது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Snapdragon 8+ Gen 1) பிராசஸர் உடன் அட்ரினோ 730ஜிபியு வசதியும் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன். குறிப்பாக இதன் பிராஸசர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு Moto MyUX சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் மூலம் இந்த போன் இயங்குகிறது.
3800 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் 33 வாட்ஸ் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 5 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்குகிறது இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன். இந்த போல்டபில் போன் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டு இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
12எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா போன். எனவே இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications








